- Prep
- 10 min
- Cook
- 5 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
பலாக்கொட்டை பொடிமாஸ் இது போன்று ஒரு முறை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அடகாமான சுவையில் இருக்கு. அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் பலாக்கொட்டையை தோல் நீக்கி வெயிலில் கையவைத்துக்கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
வேக வைத்த பலாக்கொட்டையை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அத்துடன் பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரைத்து வைத்துள்ள பலாக்கொட்டையை சேர்த்து கலந்து பரிமாறவும்.






