- Advertisement -
இது போன்று பனீர் பக்கோடா மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
பனீர் பக்கோடா | Paneer Pakoda Recipe In Tamil
இது போன்று பனீர் பக்கோடா மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ பனீர்
- ¼ கப் சோள மாவு
- 1 கப் கடலை மாவு
- 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 பின்ச் கலர் பொடி
- உப்பு தேவையான அளவு
- சாட் மசாலா தேவைக்கு
- 1 முட்டை
- 1 டீஸ்பூன் மிளகு இரண்டாக போதித்தது
- ¼ டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் பனீரை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கட்டிகள் இல்லாமல் இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பனீரை சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும்.
- பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்திருக்கும் பனீரை ஒவொரு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும். பரிமாறும் பொழுது சாட் மசாலாவை தூவி பரிமாறவும்.