- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஈஸியான முறையில் பன்னீர் மிளகு தொக்கு செய்து கொடுங்கள். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர்.
குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. இந்த பன்னீர் மிளகு தொக்கு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பன்னீர் மிளகு தொக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பீட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்து போர் அடித்தவர்கள் நிச்சயமாக இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த ரெசிபி ஒரு மாற்றாக இருக்கும். சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் மிளகு தொக்கு எப்படி தாயார் செய்யலாம் என பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஜப்பான் பன்னீர் ரெசிபி இந்த மாதிரி தான் செய்யணும்!!
Ingredients
Method
முதலில் பன்னீரை மிகவும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் நாம் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். இதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் பன்னீரை சேர்த்து கலந்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் மிளகு தொக்கு தயார்.






