- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இதுவரை எத்தனையோ வகையான சாத ரெசிபியை செய்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் வித்தியாசமான அதே சமயம் ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ரெசிபி செய்ய போகிறோம்.
ஆம் இந்த பதிவில் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான பருப்பு பொடி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். பருப்பு பொடி சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சுட சுட இருக்கும் சாதத்தில் நெய்யோ அல்லது எண்ணெய்யையோ ஊற்றி அதில் இந்த பருப்பு பொடியை போட்டு உண்ணும் சுவையே தனி தான் என்றால் அது மிகையல்ல.
இந்த பருப்பு பொடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி வெகு எளிதாக வெறும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதை நாம் செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த பருப்பு பொடியை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்து விடலாம். இந்த பருப்பு பொடியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதை நாம் அரைத்தவுடன் கைபடாமல் ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு விட்டால் இதை நாம் சுமார் 2 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இப்போது சுவையான பருப்பு பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் ரசம் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேகவைத்த சாதம், சிறிதளவு அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பருப்பு பொடி சாதம் தயார்.






