- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Koottu, Side Dish
காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பால் கூட்டு இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க சுரைக்காய் பால் கூட்டு எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.
Ingredients
Method
சுரைக்காயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். 5 நிமிடம் வதக்கிய பின், சுரைக்காயையும் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வையுங்கள்.
அவ்வப்பொழுது திறந்து கிளறுங்கள். சுரைக்காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து, நன்கு கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வரும்பொழுது இறக்குங்கள்.






