Advertisement
ஸ்நாக்ஸ்

ஒவன் இருந்தால் போதும் ஈஸியாக ஆரோக்கியம் நிறைந்த கம்பு சாக்லேட் பிஸ்கட் வீட்டிலயே செஞ்சி சாப்பிடலாம்!

Advertisement

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி குக்கீஸ், மூலிகை பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட் என சாப்பிட்ட நீங்கள் கம்பு சாக்லேட் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாக இந்த கம்பு திகழ்கிறது.

Advertisement

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்கட் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த பிஸ்கட் மிகவும் ருசியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

கம்பு சாக்லேட் பிஸ்கட் | Pearl Choco Biscuit Recipe In Tamil

Print Recipe
மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி குக்கீஸ், மூலிகை பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட் என சாப்பிட்ட நீங்கள் கம்பு சாக்லேட்
Advertisement
பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்கட் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌
Course evening, snacks
Cuisine Indian
Keyword Pearl Choco Biscuit
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 158

Equipment

  • 1 பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

Ingredients

  • 1 கப் கம்பு மாவு
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் வெண்ணெய்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • சாக்கோ சிப்ஸ் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பவுளில் கம்பு மாவு,‌ கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் வெண்ணெய், சலித்து வைத்துள்ள மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.
  • பின் இந்த மாவினை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி நடுக்கையில் வைத்து லேசாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதன் மீது பொடிதாக நறுக்கியாக நட்ஸினை வைத்து அழுத்திவிடவும். இவ்வாறு மிதமுள்ள அனைத்து மாவையும் உருட்டி பிஸ்கட் போல் செய்து கொள்ளுங்கள்.
  • பின் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து 12 நிமிடங்கள் கம்பு பிஸ்கட்டை பேக் செய்து எடுத்தால் சுவையான, சத்தான கம்பு சாக்கோ பிஸ்கட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 158kcal | Carbohydrates: 7.2g | Protein: 11g | Fat: 4.2g | Saturated Fat: 1.7g | Sodium: 5mg | Potassium: 195mg | Fiber: 8.5g | Vitamin A: 9IU | Vitamin C: 27mg | Calcium: 8mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : டீ, காபியுடன் சாப்பிட சுவையான தினை பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

2 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

2 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

2 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

4 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

5 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

5 மணி நேரங்கள் ago