ஒவன் இருந்தால் போதும் ஈஸியாக ஆரோக்கியம் நிறைந்த கம்பு சாக்லேட் பிஸ்கட் வீட்டிலயே செஞ்சி சாப்பிடலாம்!

- Advertisement -

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி குக்கீஸ், மூலிகை பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட் என சாப்பிட்ட நீங்கள் கம்பு சாக்லேட் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாக இந்த கம்பு திகழ்கிறது.

- Advertisement -

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்கட் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த பிஸ்கட் மிகவும் ருசியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

Print
5 from 1 vote

கம்பு சாக்லேட் பிஸ்கட் | Pearl Choco Biscuit Recipe In Tamil

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி குக்கீஸ், மூலிகை பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட் என சாப்பிட்ட நீங்கள் கம்பு சாக்லேட் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்கட் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Pearl Choco Biscuit
Yield: 4 People
Calories: 158kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு மாவு
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் வெண்ணெய்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • சாக்கோ சிப்ஸ் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் கம்பு மாவு,‌ கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் வெண்ணெய், சலித்து வைத்துள்ள மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.
  • பின் இந்த மாவினை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி நடுக்கையில் வைத்து லேசாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதன் மீது பொடிதாக நறுக்கியாக நட்ஸினை வைத்து அழுத்திவிடவும். இவ்வாறு மிதமுள்ள அனைத்து மாவையும் உருட்டி பிஸ்கட் போல் செய்து கொள்ளுங்கள்.
  • பின் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து 12 நிமிடங்கள் கம்பு பிஸ்கட்டை பேக் செய்து எடுத்தால் சுவையான, சத்தான கம்பு சாக்கோ பிஸ்கட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 158kcal | Carbohydrates: 7.2g | Protein: 11g | Fat: 4.2g | Saturated Fat: 1.7g | Sodium: 5mg | Potassium: 195mg | Fiber: 8.5g | Vitamin A: 9IU | Vitamin C: 27mg | Calcium: 8mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : டீ, காபியுடன் சாப்பிட சுவையான தினை பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள்!!