Advertisement
அசைவம்

காரைக்குடி பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

Advertisement

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும் அதுவும் பெப்பர் சிக்கன் என்றால் அவ்வளவு தான் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல் சுவையில் எப்படி பெப்பர் சிக்கன் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த பேப்பர் சிக்கன் செய்து சுட சுட சாதத்துடன்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மதுரை மட்டன் பெப்பர் ப்ரை!

Advertisement

ரசம் ஊற்றி இந்த சிக்கனை சேர்த்து சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் சளி பிடித்திருந்தால், அல்லது மழை காலங்களில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பெப்பர் சிக்கன் | Pepper Chicken Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும் அதுவும் பெப்பர் சிக்கன் என்றால் அவ்வளவு தான் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல் சுவையில் எப்படி பெப்பர் சிக்கன் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த பேப்பர் சிக்கன் செய்து சுட சுட சாதத்துடன் ரசம் ஊற்றி
Advertisement
இந்த சிக்கனை சேர்த்து சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pepper chicken, பெப்பர் சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 326

Equipment

  • கடாய்

Ingredients

  • ½ கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • பெப்பர் தேவைக்கேற்ப
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் சிக்கனை போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நன்கு10 நிமிடம் வேக வைக்கவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை, சேர்த்து பொரிந்ததும் வேக வைத்த சிக்கனை போட்டு அத்துடன் கறிமசாலா தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு கிளறி கடைசியாக பெப்பர் பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 650G | Calories: 326kcal | Protein: 21g | Saturated Fat: 0.5g | Sodium: 30mg | Potassium: 603mg | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

48 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

2 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

12 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

14 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

15 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

18 மணி நேரங்கள் ago