- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 17 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
மிளகு சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி செய்து பாருங்கள்!
இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்து விடலாம். இத்துடன் காலிப்ளவர் பொரியல். உருளை கிழங்கு பொரியல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Ingredients
Method
முதலில் ½ கப் பாசுமதி அரிசியை ஊறவைத்து பொல பொலவென்று வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் வேகும் அளவிற்கு வதக்கவும்.
வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த சாதத்தை சேர்த்து மிளகு தூள் சேர்த்து, அத்துடன் நெய் சேர்த்து கலந்து நெய்ல் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான மிளகு சாதம் தயார்.






