Advertisement
வீட்டு குறிப்பு

தினசரி சமையலுக்கு தேவையான இந்த பொருட்களை வீட்டிலேயே ப்ரெஷா வளர்க்கலாம்!!

Advertisement

சமையலுக்கு புதிதாக வந்த காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை பயன்படுத்தினால் கூடுதல் சுவையாக இருக்கும். இல்லத்தரசிகள் அனைவரும் ஃப்ரஷ்சாக வரும் காய்கறிகளையே பயன்படுத்த விரும்புகிறார்கள். அதிலும் நாம் செய்யும் உணவுகளில் சிறிது கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை லேசாக மேலே தூவி விட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

நீங்கள் ஒரு பொழுதுபோக்காக சமையலறை தோட்டத்தை வளர்க்கிறீர்களோ அல்லது ஆரோக்கியமான உணவை நோக்கி விழிப்புடன் நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ, எதுவாக இருந்தாலும் அதற்கு நீங்கள் அதிக சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே சில அத்தியாவசிய செடி மற்றும் மூலிகைகளை எளிதில் வளர்க்கலாம்.

Advertisement

துளசி

துளசியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். இது நரம்புகளை அமைதி படுத்த உதவுகின்றன மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. அதுவே தானாக வளரும் மற்றும் இதனை நமது கிச்சனிலேயே வளர்க்கலாம். இது முகப்பரு மற்றும் அலர்ஜி போன்றவர்களுக்கு எதிராக பயன்படுகிறது.

கொத்தமல்லி

கொத்தமல்லி நம் உடலில் இருந்து உலோக அடிப்படையிலான நச்சுகளை அகற்ற சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகை பாதரசம், ஈயம் போன்ற உலோக அடிப்படையிலான நச்சுப் பொருட்களுடன் இணைந்து அவற்றை திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கின்றன. கொத்தமல்லி பல்வேறு உணவு வகைகளில் சுவையான மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆர்கனோ

ஆர்கனோ இத்தாலிய உணவுகளில் சுவையூட்டியாக பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்காற்றுகிறது. இது பூஞ்சை, பொடுகு, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உங்கள் வீட்டில் பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் இதனை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

தைம்

கண்கள், தோல், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும் தைமில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. சமைக்கும் போது, இது , வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியுடன் நன்றாக இணைகிறது. இதனை உங்கள் வீட்டிலேயே எளிதில் வளர்க்கலாம்.

ரோஸ் மேரி

வீட்டில் முக்கியமாக வளர்க்க வேண்டிய செடிகளில் ஒன்று இந்த ரோஸ்மேரி. இதை தொட்டாலே அதன் மனத்தை வீடு முழுவதும் பரப்புகிறது. அதனால்

Advertisement
இதனை மந்திர செடி என்றும் கூறலாம். இது மனத்தை பரப்புவது மட்டுமல்லாமல் நமக்கு நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் புற்றுநோய்க்கான செல்களை எதிர்த்து போராடுகிறது.

பார்ஸ்லே

பார்ஸ்லே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, குறிப்பாக வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது இரத்த சுத்திகரிப்புக்கு அவசியம். இதற்கு அதிக சூரிய ஒளி மற்றும் பராமரிப்பு தேவையில்லை. கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், அது மிகவும் மெதுவாக வளரும்.

Advertisement

லெமன் க்ராஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குவதால், புற்று நோய் மற்றும் கண் அழற்சியை எதிர்த்துப் போராட லெமன் க்ராஸ் பயன்படுகிறது. அதன் வலுவான எலுமிச்சை வாசனை, உங்கள் உணவின் நறுமணத்தை அதிகரிக்கும். மேலும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக தேநீரிலும் இதனை சேர்க்கலாம்.

லாவண்டர்

லாவண்டர் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திலும் பங்களிக்கிறது. இதில் வயிறு வீக்கத்தை குணப்படுத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. மேலும் இதனை நாம் பேக்கிங் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதனை எளிதாக நமது வீட்டு தோட்டத்திலேயே நம்மளால் வளர்க்க முடியும்.

புதினா

புதினாவை நமது வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். இதில் சைனஸ் நெரிசலை போக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. புதினாவை டீயுடன் சேர்த்து கொதிக்க வைத்து உட்கொள்ளும் பொழுது நமக்கு இருக்கும் தலைவலி மற்றும் உடம்பு வலிகள் பறந்து விடும். இதில் இருக்கும் எண்ணெய்கள் மாதவிடாய் காலங்களில் வரும் வலி மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago