Advertisement
ஆன்மிகம்

இந்துக்கள் பூஜை செய்யும் போது மணி அடிப்பதற்கான காரணம் என்னனு தெரியுமா?

Advertisement

இந்துக்கள் பூஜை செய்து தெய்வத்தை வழிபடும் போது பல்வேறு தனித்துவமான விதிமுறைகளை பின்பற்றுவது வழக்கம். அதில் பூஜையின் போது மணி அடிப்பதும் சங்கொலி முழங்குவதும் மிக முக்கியமானவைகளாக கருதப்படுகிறது. கோவில்களில் மட்டும் இல்லாமல் வீடுகளிலும் பூஜை செய்யும் போதும் மணி அடித்து தெய்வத்தை வணங்குவார்கள். முக்கியமாக கோவிலில் தெய்வத்தை வழிபட்டு விட்டு மணி அடிப்போம். அப்படி இந்துக்கள் தெய்வத்தை வணங்கும்போது ஏன் மணி அடிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் பல மாற்றங்கள் ஏற்ப்படும்

கோவிலிலும் வீட்டிலும் மணியடித்து தெய்வத்தை வழிபடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆன்மீகம் மற்றொன்று அறிவியல். இரண்டு ரீதியாகவும் காரணங்கள் உண்டு. மணி அடித்து தெய்வத்தை வழிபடுவது தெய்வத்தை அழைப்பது போல அர்த்தம். மணி அடித்து தெய்வத்தை வழிபடுவதால் மனிதர்களின் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இது வீட்டிலும் கோவிலிலும் எதிர்மறையாற்றலை நீக்கி நேர்மறை ஆற்றல்களை முழுவதுமாக நிரப்பும். மணி அடிக்கும்போது அந்த ஒலி ஓம் என்ற தெய்வீக ஒலியை உருவாக்கும். இது மனிதர்களின் எண்ணங்களில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழித்துவிடும்.

Advertisement

தெய்வீக சத்தி

எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை ஆற்றலை உருவாக்குவது மட்டுமல்லாமல் இந்த ஒலி மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை சீராக செயல்பட வைக்கும். குறிப்பாக வெண்கலத்தால் செய்யப்பட்ட மணியில் இருந்து வரும் ஓசை மனிதனின் மூளையில் வலது மற்றும் இடது மடல்களுக்கு இடையே நல்லிணக்கத்தை

Advertisement
ஏற்படுத்தி மூளையை நன்றாக செயல்பட வைக்கும். கோவிலில் உள்ள மணியில் தெய்வீக சக்திகள் இருக்கும் எனவே நாம் மணியை அழைக்கும் போது அந்த இடத்தில் உள்ள தீய சக்திகள் விரட்டப்பட்டு நல்ல சக்திகள் மட்டுமே நிலைக்கும். தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களை மட்டும் இல்லாமல் அந்த இடத்தில் ஒரு தெய்வீக சக்தியை நிலைநாட்டும்.
Advertisement

ஆன்மாவும் தெய்வமும் இனையும்

கோவிலில் நாம் தெய்வத்தை வழிபடும் போது நம்முடைய சிந்தனை வேறு இடத்திற்கு போகாமல் நம்மை ஒருநிலைப்படுத்தி நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த மணி ஓசை உதவும். நம்முடைய உள் உணர்வு மற்றும் முழு சிந்தனையும் தெய்வத்தோடு இணைக்க இந்த மணியோசை உதவும். மேலும் மனதையும் ஆன்மாவையும் அமைதி பெற வைக்கும். அறிவியல் ரீதியாக மணி ஓசை நம்முடைய மூளைக்குள் ஏழு நொடிகள் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு நொடிகளில் ஏழு சக்கரங்கள் தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் நினை ஓசை தீய சக்திகளை விரட்டும்.

இதனையும் படியுங்கள் : கோவிலுக்கு செல்லும் போது மறந்தும் இந்த செயலை மட்டும் செய்யாதீர்கள்! கோவில் சென்ற பலன் கூட கிடைக்காது!

Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

4 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

5 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

7 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

9 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

10 மணி நேரங்கள் ago