கோவிலுக்கு செல்லும் போது மறந்தும் இந்த செயலை மட்டும் செய்யாதீர்கள்! கோவில் சென்ற பலன் கூட கிடைக்காது!

- Advertisement -

முதலில் கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலினால் மட்டுமே சென்று வர வேண்டும். கோவிலுக்கு வெளியில் தானம் கேட்பவர்களுக்கு வெளியில் வரும் பொழுது மட்டு தான் தானம் கொடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே பிரவேசிக்கும் போது கோவிலின் கொடி மரத்தை தொட்டு வணங்கிய பின்பு தான், நாம் மற்ற தெய்வங்களை சென்று வழிபட வேண்டும். இப்படி அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் சாஸ்திர ரீதியாக ஒரு கோவிலுக்கு எப்படி முறையாக செல்ல வேண்டும், நாம் முதலில் எங்கிருந்து வணங்கி செல்ல வேண்டும் என்பது வரை சாஸ்த்திரம் வழியாக நமக்கு கூறுகிறர்கள்.

-விளம்பரம்-

கோவில் மணி

கோவிலுக்கு தெய்வத்திடம் பிராத்தனை செய்ய செல்லும் பொழுது மனதை அலைபாயவிடாமல் ஒருமுகப்பட்டு தெய்வத்தை நாம் முழுமையாக வழிபட வேண்டும். கோவிலுக்குள் கண்ட இடங்களில் நின்று கொண்டு அரட்டை அடிப்பது, வேறு ஏதோ ஒரு சிந்தனையுடன் இருப்பது இப்படி இது போன்ற செயல்களை நாம் செய்யும் போது கோவிலுக்கு சென்றதற்கான பலன்களை கிடைக்காது. பின் கோவில் மணியை தெய்வத்தை வணங்கும் போது மட்டும் தான் அடிக்க வேண்டும்.

- Advertisement -

அதை விட்டு விட்டு சும்மா நினைத்த நேரத்திற்கும் மணியை அடிக்க கூடாது. மேலும் கோவில் மணியை எக்காரணம் கொண்டும் நீங்கள் வெளியில் வரும் பொழுது அடிக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள். தெய்வத்தின் திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும் இரு கைகளையும் கூப்பி வணங்கும் சமயத்தில் கோவில் மணியை அடிக்க வேண்டும். கோவில் மணியை வெளியில் வரும் பொழுது நீங்கள் அடித்தால் கோவிலுக்கு போன பலனை இழந்து விடுவீர்கள் அதனால் இனி தேவை இல்லாமல் அடிக்காகூடாது.

தானம் வழங்குதல்

இப்படி கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு முறைப்படி கையாள வேண்டும் அதை நாம் முறையாக கையாளும் பொழுது நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் நல்ல பலன்களை மட்டும் கொடுக்கும். தெய்வத்தை தரிசித்து விட்டு வெளியே வரும் போத கோவிலுக்கு வெளியில் தானம் கேட்பவர்களுக்கு யோசிக்காமல் தானம் கொடுக்கலாம் அதிலும் நீங்கள் வயதானவர் மற்றம் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதால் நிறையவே புண்ணியங்கள் வந்து சேரும். கோவிலில் இருக்கும் பொழுது ஒரு விதமான நல்ல அதிர்வலைகள் உண்டாவதை நீங்கள் மனதாற நன்கு உணர வேண்டும். ஆண்கள் முடிந்த அளவிற்கு கோவில் செவ்லும் போது மேல்சட்டை இல்லாமல் செல்லுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here