பொரிச்ச குழம்பு இப்படி செய்து சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! அஹா என்ன ருசி என்ன ருசி!

- Advertisement -

பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பருப்பு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த குழம்பையும் சேர்த்து சாபிட்டால் அமிர்தமாக இருக்கும். அதனால் இந்த புளி இல்லா பொரிச்ச குழம்பு எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இநத சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

poricha kulambu
Print
2 from 2 votes

பொரிச்ச குழம்பு | Poricha Kulambu Recipe In Tamil

பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த குழம்பையும் சேர்த்து சாபிட்டால் அமிர்தமாக இருக்கும்….
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time17 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: poricha kulambu, பொரிச்ச குழம்பு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நீளவாக்கில் நறுக்கியது
  • 2 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • 2 முருகைக்காய் நறுக்கியது
  • குழம்பு மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கவும், வதங்கியதும் நறுக்கிய உருளைகிழங்கு, முருகைக்காய், சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  • முருகைக்காய், உருளைக்கிழங்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.