நாம முட்டையில பொடிமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது உருளைக்கிழங்கு பொடி மாஸ். கிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது ரொம்பவே யாரும் செய்திருக்க மாட்டோம். ஆனால் இப்போ உருளைக்கிழங்கு வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். உருளைக்கிழங்கு வறுவல் அப்படின்னா எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். கிழங்குகள் எல்லாமே அதிக அளவு மாவு சத்து உடையது.
கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கு உணவில் சேர்த்துக்கும் போது அதிக அளவு மாவுச்சத்து அவங்களுக்கு கிடைக்குது. உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப மாவு சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச உருளைகிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க.
அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு கிழக்குகளை எப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும். அந்த வகையில கிழங்குகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொடிமாஸ் வறுவல் செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த உருளைக்கிழங்கை வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம். வாங்க எப்படி சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு பொடி மாஸ் | Potato Podimas In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ உருளைக்கிழங்கு
- 3 வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 4 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் தனியா விதைகள்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு கழுவி உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கில் உப்பு சேர்த்து பிசறி எடுத்துதனியாக வைத்து விடவும்.
- பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை பிழிந்து விட்டு நீரை எடுத்த பிறகு வெறும் உருளைக்கிழங்குதுருவலை மட்டும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கு வதங்கி கொண்டிருக்கும் பொழுதே வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்தெடுத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்குவெந்த பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மிளகாய் , சீரக, தனியா பொடியை சேர்த்து நன்றாககிளறி விடவும்.
- பொடியை சேர்த்து நன்றாக மொழி மாறுவதன் வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டுஇறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!