உருளைக்கிழங்கு புட்டு இந்த மாதிரி செஞ்சா சாதத்தில் போட்டு சாப்பிட சுவையா இருக்கும்!!

- Advertisement -

உருளைக்கிழங்கு வச்சு உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு கறி, உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு மசால் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா ஒரு தடவை உருளைக்கிழங்கு வைத்து இந்த சூப்பரான உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். நீங்க உருளைக்கிழங்கு அப்படியே சும்மா ஃப்ரை பண்ணி கொடுத்தாலே வீட்டில் இருக்கிற எல்லாரும் விரும்பி சாப்பிட வாங்க.

-விளம்பரம்-

அப்படி இருக்கும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு புட்டு மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் உங்க சமையலுக்கு அடிமை ஆகிடுவாங்க அந்த அளவுக்கு அருமையாக இருக்கும். உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது ஆனால் டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். நிறைய பெரிய வெங்காயம் சேர்த்து பூண்டு சேர்த்து செய்யப் போற இந்த ரெசிபி ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு அவ்வளவு அருமையா இருக்கும்.

- Advertisement -

சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடலாம். பொதுவாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு ரெசிபி என்றாலே ரொம்ப பிடிக்கும் அதுலயும் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

ருசியான இந்த உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி ஒரு தடவை செஞ்சு பார்த்தாலே அடிக்கடி செய்யணும் அப்படின்னு தோணும் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கும் செஞ்சு கொடுத்து பாருங்க. நல்லா உதிரி உதிரியா கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
3 from 2 votes

உருளைக்கிழங்கு புட்டு | Potato Puttu Recipe In Tamil

உருளைக்கிழங்கு வச்சு உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு கறி, உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு மசால் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா ஒரு தடவை உருளைக்கிழங்கு வைத்து இந்த சூப்பரான உருளைக்கிழங்கு புட்டு ரெசிபி செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். நீங்க உருளைக்கிழங்கு அப்படியே சும்மா ஃப்ரை பண்ணி கொடுத்தாலே வீட்டில் இருக்கிற எல்லாரும் விரும்பி சாப்பிட வாங்க. அப்படி இருக்கும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு புட்டு மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் உங்க சமையலுக்கு அடிமை ஆகிடுவாங்க அந்த அளவுக்கு அருமையாக இருக்கும். இந்த ரெசிபி ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு அவ்வளவு அருமையா இருக்கும் சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Potato Puttu
Yield: 4 People
Calories: 110kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைத்த எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை மசித்து மஞ்சள் தூள் சாம்பார் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கு உதிரி உதிரியாக வரும் வரை நன்றாக வதக்கிய பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 110kcal | Carbohydrates: 7.2g | Protein: 16g | Fat: 3.4g | Sodium: 70mg | Potassium: 146mg | Vitamin C: 72mg | Calcium: 30mg | Iron: 14mg

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கார கறி

-விளம்பரம்-