உருளைக்கிழங்கு அப்படின்னு சொன்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரசம் சாதம் வெச்சு உருளைக்கிழங்கு பொரிச்சு கொடுத்தாலே ஒரு சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க காய்கறிகளிலேயே ரொம்ப ரொம்ப புடிச்ச காய்கறி என்னனு கேட்டா ஒரு சில உருளைக்கிழங்கு தான் சொல்லுவாங்க. லெமன் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே உருளைக்கிழங்கு பொரியல் தான் பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். அந்த வகையில உருளைக்கிழங்கு வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு சாதம் ரெசிபி இப்ப நம்ம பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறதால அவங்களுக்கு உருளைக்கிழங்கு பொரியலோட சேர்த்து இந்த உருளைக்கிழங்கு சாதத்தை செஞ்சு கொடுத்து விடுங்க. இதுக்கு சைடு டிஷ் செய்ய தேவை இல்லை. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸுக்கு கொடுத்து விட்டாலே போதும் அவங்க சட்டுனு சாப்பிட்டு காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க. அவங்க சாப்பிடுவாங்களா மாட்டாங்களான்னு யோசிக்கவே யோசிக்காதீங்க சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம பெரியவங்களுக்கு நீங்க இதை டிபன் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டா கூட விரும்பி சாப்பிட்டு வருவாங்க.
சில சமயங்கள்ல வீட்ல குழம்பு வைக்கிறதுக்கு எதுவும் பொருட்கள் இல்லன்னா நீங்க யோசிக்காம உருளைக்கிழங்கு இருந்தால் இந்த உருளைக்கிழங்கு சாதம் செஞ்சு சைடிஷ் எதுவுமே இல்லாம சிப்ஸ் இருந்தா கூட வச்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் செஞ்சு கொடுத்த அசத்துங்க. சில சமயங்களில் பெருசா எதுவும் சமைக்க முடியலன்னா இதை செஞ்சிடுங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுல வெங்காயம் தக்காளி மசாலாக்கள் எல்லாமே சேர்க்கிறதால ஒரு சூப்பரான வாசனையோட சாப்பிடுறதுக்கு அவ்ளோ மணமாவும் ருசியாவும் இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு சாதம் | Potato Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 உருளைக்கிழங்கு
- 1 கப் சாதம்
- 1 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்.
- அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- தக்காளி சேர்த்து மசிய வதக்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
- பிறகு சாதம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு மிளகு வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!