உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். இப்படி ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கும் சலித்து போய் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலாக சில சாதங்களை தயார் செய்து அனுப்பலாம். ஆம் உதாரணமாக நீங்கள் சாம்பார் சாதம் அடிக்கடி செய்திருப்பீர்கள் அதை தவிர இன்னும் சில சாதங்கள் செய்து கொடுத்து அனுப்பலாம்.
இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?
இன்று நாம் உருளைக்கிழங்கு சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீங்கள் இதுபோன்று காரசாரமான உருளைக்கிழங்கு சாதத்தை உங்கள் வீட்டில் அனைவருக்கும் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
உருளை கிழங்கு சாதம் | Potato Sadam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 3 tbsp எண்ணெய்
- 1 tbsp கடுகு
- ½ tbsp சீரகம்
- ½ tbsp சோம்பு
- 2 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 1 பட்டை
- 2 ஏலக்காய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 காய்ந்த மிளகாய்
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 3 உருளை கிழங்கு பொடியாக நறுக்கியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- 1 tbsp கரம் மசாலா
- 1 ½ tbsp மிளகாய்த் தூள்
- 3 கப் சாதம்
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், சோம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து நன்கு தாளிக்கவும்.
- அதன் பின் மூன்று பூண்டு பற்கள் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.. இதையும் கடாயில் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதையும் கடாயில் சேர்த்து பின் தனுடன் மூன்று உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல்களை சீவி பொடி பொடியாக நறுக்கி அதையும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு ஒரு பத்து நிமிடம் உருளைக்கிழங்கை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 10 நிமிடம் கழித்து ஒரு உருளைக்கிழங்கு கையில் எடுத்து வதங்கி விட்டதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் போன்ற மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளரி விட்டு கொள்ளவும்.
- அதன்பின் நம் ஏற்கனவே வடித்து வைத்துள்ள மூன்று கப் சாதத்தை சேர்த்து இதனுடன் சிறிது கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
English Overview: potato sadam is one of the most important dishes in india. potato sadam recipe or potato sadam seivathu eppadi or potato sadam in Tamil are a few important terms to describe this recipe in the tamil language