Advertisement
அசைவம்

சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான இறால் புளிக்குழம்பு இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு புளிக்குழம்பு தான் இப்போது பார்க்க போகிறோம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இறால் புளிக்குழம்பு | Prawn Pulikulambu Recipe in tamil

Print Recipe
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு புளிக்குழம்பு தான் இப்போது பார்க்க போகிறோம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 178.89

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 100 கிராம் வெண்டைக்காய்
  • 1/4 கிலோ இறால்
  • 2 தக்காளி
  • 6 பூண்டு
  • 7 சின்ன வெங்காயம்
  • 1 கறிவேப்பிலை கொத்து
  • 3 பச்சை மிளகாய்
  • புளி எலுமிச்சைஅளவு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • தக்காளி,வெண்டைக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, புளியைகரைத்து வைக்கவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பூண்டுடை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வெறும் பாத்திரத்தில் வெண்டைக்காயை போட்டு கருகவிடாமல் இரண்டு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் தக்காளி, தட்டி வைத்த பூண்டை சேர்த்து வதக்கவும். அதனுடன் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் இறால் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான இறால் புளிக்குழம்பு ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 178.89kcal | Carbohydrates: 5.95g | Protein: 19.12g | Fat: 7.67g | Sodium: 791.58mg | Potassium: 428.1mg | Fiber: 1.78g | Vitamin A: 3.28IU | Vitamin C: 16.52mg | Calcium: 77.83mg | Iron: 1.51mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

12 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

13 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

15 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

18 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

18 மணி நேரங்கள் ago