சாம்பல் பூசணி சேர்த்த ருசியான கிச்சடி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான காலை உணவு இது!

- Advertisement -

கிச்சடி என்று சொன்ன உடனேயே ரவா கிச்சடி தான் ஞாபகத்துக்கு வரும். பலருக்கு இந்த கிச்சடி மிகவும் துடிக்கும் பலருக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நாம் இன்று செய்யப் போகும் இந்த கிச்சடி ரவா கிச்சடி கிடையாது.சாம்பல் பூசணி கிச்சடி. இந்த கிச்சடியை புளிக்குழம்புடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

பொதுவாக பூசணிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும் என்பார்கள். ஆனால் இந்த பூசணிக்காயை பலருக்கு பிடிக்காது. ஆனால் இப்பொழுது நாம் செய்யப் போகின்ற விதத்தில் செய்து கொடுத்தால் பூசணிக்காய் பிடிக்காதவர்களும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள் காரணம் அந்த கிச்சடியின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

 பூசணிக்காயை வைத்து ஜூஸ் பூசணிக்காய் மோர் குழம்பு பூசணிக்காய் சாம்பார், பூசணிக்காய் பொரியல் என செய்திருப்போம். ஆனால் பூசணிக்காயை வைத்த இந்த கிச்சடியை யாரும் இதுவரையில் செய்திருக்க மாட்டோம். ஒருமுறை இந்த கிச்சடியை செய்தால் பிறகு எப்பொழுது பூசணிக்காய் வாங்கினாலும் இந்த கிச்சடியை அந்த அளவிற்கு இதனுடைய சுவை ருசியாகவும் அருமையாகவும் இருக்கும்.

பூசணிக்காயில பல வகைகள் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க போறது சாம்பல் பூசணி தான். இந்த சாம்பல் பூசணியை வெள்ளை பூசணிக்காய் என்றும் தடியங்காய் என்றும் அழைப்பார்கள்.வாங்க இந்த சாம்பல் பூசணி கிச்சடிகை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 1 vote

சாம்பல் பூசணி கிச்சடி | Pumpkin Kichadi Recipe In Tamil

பொதுவாக பூசணிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும் என்பார்கள். ஆனால் இந்த பூசணிக்காயை பலருக்கு பிடிக்காது. ஆனால் இப்பொழுது நாம் செய்யப் போகின்ற விதத்தில் செய்து கொடுத்தால் பூசணிக்காய் பிடிக்காதவர்களும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள் காரணம் அந்த கிச்சடியின் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பல் பூசணியை வெள்ளை பூசணிக்காய் என்றும் தடியங்காய் என்றும் அழைப்பார்கள்.வாங்க இந்த சாம்பல் பூசணி கிச்சடிகை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Pumpkin Kichadi
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சாம்பல் பூசணி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பூசணிக்காயின் நிழல் தோழி சீவி உங்களுக்கு தேவையான வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து சாம்பார் பொடி போட்டு நன்றாக கிளற வேண்டும். பூசணிக்காய் ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g