Advertisement
சைவம்

சாம்பல் பூசணி சேர்த்த ருசியான கிச்சடி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான காலை உணவு இது!

Advertisement

கிச்சடி என்று சொன்ன உடனேயே ரவா கிச்சடி தான் ஞாபகத்துக்கு வரும். பலருக்கு இந்த கிச்சடி மிகவும் துடிக்கும் பலருக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நாம் இன்று செய்யப் போகும் இந்த கிச்சடி ரவா கிச்சடி கிடையாது.சாம்பல் பூசணி கிச்சடி. இந்த கிச்சடியை புளிக்குழம்புடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

பொதுவாக பூசணிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும் என்பார்கள். ஆனால் இந்த பூசணிக்காயை பலருக்கு பிடிக்காது. ஆனால் இப்பொழுது நாம் செய்யப் போகின்ற விதத்தில் செய்து கொடுத்தால் பூசணிக்காய் பிடிக்காதவர்களும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள் காரணம் அந்த கிச்சடியின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

 பூசணிக்காயை வைத்து ஜூஸ் பூசணிக்காய் மோர் குழம்பு பூசணிக்காய் சாம்பார், பூசணிக்காய் பொரியல் என செய்திருப்போம். ஆனால் பூசணிக்காயை வைத்த இந்த கிச்சடியை யாரும் இதுவரையில் செய்திருக்க மாட்டோம். ஒருமுறை இந்த கிச்சடியை செய்தால் பிறகு எப்பொழுது பூசணிக்காய் வாங்கினாலும் இந்த கிச்சடியை அந்த அளவிற்கு இதனுடைய சுவை ருசியாகவும் அருமையாகவும் இருக்கும்.

பூசணிக்காயில பல வகைகள் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க போறது சாம்பல் பூசணி தான். இந்த சாம்பல் பூசணியை வெள்ளை பூசணிக்காய் என்றும் தடியங்காய் என்றும் அழைப்பார்கள்.வாங்க இந்த சாம்பல் பூசணி கிச்சடிகை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சாம்பல் பூசணி கிச்சடி | Pumpkin Kichadi Recipe In Tamil

Print Recipe
பொதுவாக பூசணிக்காய்
Advertisement
சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும் என்பார்கள். ஆனால் இந்த பூசணிக்காயை பலருக்கு பிடிக்காது. ஆனால் இப்பொழுது நாம் செய்யப் போகின்ற விதத்தில் செய்து கொடுத்தால் பூசணிக்காய் பிடிக்காதவர்களும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள் காரணம் அந்த கிச்சடியின் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பல் பூசணியை வெள்ளை பூசணிக்காய் என்றும் தடியங்காய்
Advertisement
என்றும் அழைப்பார்கள்.வாங்க இந்த சாம்பல் பூசணி கிச்சடிகை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Pumpkin Kichadi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ சாம்பல் பூசணி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பூசணிக்காயின் நிழல் தோழி சீவி உங்களுக்கு தேவையான வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து சாம்பார் பொடி போட்டு நன்றாக கிளற வேண்டும். பூசணிக்காய் ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

28 நிமிடங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

43 நிமிடங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

2 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

6 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

15 மணி நேரங்கள் ago