Home சைவம் பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் காடை பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன்...

பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் காடை பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன.

-விளம்பரம்-

பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது.

ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் காடை பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. காடை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. அசைவ பிரியர்களுக்கு இந்த காடை மிகவும் பிடித்த உணவு என்று கூட சொல்லாம். சாதரணமான காடை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த காடையில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்? நாம் இந்த பதிவில் சுவையான காடை பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3.50 from 2 votes

காடை பிரியாணி | Quail Biryani Recipe In Tamil

பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன்பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும்பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும்திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. சாதரணமான காடை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த காடையில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்?நாம் இந்த பதிவில் சுவையான காடை பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Quail Biryani
Yield: 4
Calories: 489kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 4 காடை
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 கப் மல்லி
  • 1 கப் புதினா
  • 10 முந்திரிபருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு4

செய்முறை

  • முதலில் காடையை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாகவெட்டி பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல்முந்திரிபருப்பை நெய்யில் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணிஇலை, ஏலக்காய் சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகவதக்கவும்.
  • வெங்காயம்பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்புசேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • ஊற வைத்த அரிசியை வடிகட்டி இந்தக் கலவையோடு சேர்த்து கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துசுத்தம் செய்து வைத்துள்ள காடையை இந்த அரிசியோடு சேர்த்து  குக்கரை மூடி விடவும்.மிதமான தீயில் வைத்து 3 விசில்வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்னர் குக்கர் மூடியைத் திறந்த பொரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பினை மேலாகத் தூவி கிளறிவிட்டு சூடாக பரிமாறினால் சுவையான காடை பிரியாணி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg