Advertisement
அசைவம்

இதற்காக ஒரு முறை காடை முட்டை வாங்கி குழம்பு செஞ்சி பாருங்க! அடா அடா என்ன சுவை என்ன சுவை ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

காடை முட்டை குழம்பு ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  காடை முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் பி1 , விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ உள்ளது. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது.

இந்த குழம்பில் முட்டையுடன் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக முட்டையை வேக வைத்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதுவும் இந்த காடை முட்டை வேகவைத்தால் அப்படியா சாப்பிட பலருக்கு பிடிக்காது. ஆனால் அவித்த முட்டையை இது போல குழம்பு, குருமா போன்று செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

Advertisement

காடை முட்டை குழம்பு அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் காடை முட்டை குழம்பு எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்

காடை முட்டை குழம்பு | Quail egg Gravy Recipe In Tamil

Print Recipe
காடை முட்டை குழம்பு அருமையான சுவையில் இப்படிஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது!அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் காடை முட்டை குழம்பு எப்படி எளிதாகவீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம். அவித்த முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து
Advertisement
சாப்பிடுவார்கள். காடை முட்டை குழம்பு சுவையுடன்கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. அவித்த காடை முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Quail egg Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 58

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 20 காடை முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 தக்காளி அரைத்தது
  • 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • தண்ணீர் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு. மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 400g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 4.4g | Fat: 0.2g | Sodium: 78mg | Potassium: 325mg | Fiber: 3.8g | Vitamin C: 4.9mg | Calcium: 16mg | Iron: 0.32mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

11 seconds ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

2 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

3 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

3 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

7 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

7 மணி நேரங்கள் ago