- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க. ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா சாம்பாரும் பொரியல் மட்டும் செய்யக்கூடிய இந்த முள்ளங்கியை வைத்து மூலி பூரி பண்ண போறோம்.
இந்த முள்ளங்கி உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம முள்ளங்கி சாம்பார்ல அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். பொரியல் செய்து கொடுத்து இருப்போம். இப்படி முள்ளங்கியை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவில் சேர்த்துக் கொடுக்கணும் .
ஏதோ ஒரு வகையில் இந்த முள்ளங்கியை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு அதிக அளவு நீர்சத்து , சுண்ணாம்பு சத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த முள்ளங்கியை நம்ம உணவில் சேர்த்துக்கணும். முள்ளங்கி சீறுநீரக பிரச்சினைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. வாங்க இப்போது எப்படி அந்த பஞ்சாபி ஸ்பெஷல் மூலி பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் முள்ளங்கி தோலை சீவி விட்டு கேரட் துருவதில் துருவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு கையால் முள்ளங்கி துருவலை அழுத்தினால் அதில் இருந்து சாறு வரும் முள்ளங்கி சாறையும் மீதமுள்ள முள்ளங்கியையும் தனி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் உப்பு, ஒமம், கஸ்தூரி மேத்தி, சாறு பிழிந்த பின் உள்ள முள்ளங்கி துருவலை சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
பிறகு முள்ளங்கி சாறு சேர்த்து பிசையவும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை பிசைந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து விடவும்.
பிறகு பூரி சுடுவதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் காய்வதற்குள் பிசைந்து வைத்துள்ள முள்ளங்கி பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி இடும் கல்லில் வைத்து பூரிகளாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
தேய்த்து எடுத்து வைத்துள்ள பூரிகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமிக்க மூலி பூரி என்கிற முள்ளங்கி பூரி தயார்.






