சுவையான ராகி அடை செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று நாம் பார்க்க இருக்கின்ற உணவு காலை உணவாகவும், இரவு உணவாகவும் அல்லது மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆம், இன்று நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து சுவையான ராகி அடை செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் அடையும். ராகி சிறுதானியங்களில் ஒன்றாக இருப்பதால் அதில் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ராகி இடியாப்பம் செய்வது எப்படி ?

- Advertisement -

உதரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகி அடையை செய்து சாப்பிட்டால் அவர்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதையும் தாண்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ராகி அடையை செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ராகி அடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

ராகி அடை | Ragi Adai Recipe in Tamil

இன்று நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து சுவையான ராகி அடை செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் அடையும். ராகி சிறுதானியங்களில் ஒன்றாக இருப்பதால் அதில் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது உதரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகி அடையை செய்து சாப்பிட்டால் அவர்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதையும் தாண்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ராகி அடையை செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time30 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Ragi adai, ராகி அடை
Yield: 5 People
Calories: 256kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • 5 tbsp எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 துருவிய கேரட்
  • 1 கப் கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கப் ராகி மாவு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதனால் ராகி அடை மிருதுவாகவும், மென்மையாகவும் வரும் பின்பு ராகி மாவு நன்கு வறுப்பட்டதும் ஒரு பெரிய பவுளில் தட்டிக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கி அதன்பின் அதனுடன் ஒரு துருவிய கேரட் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன்பின் ஒரு கப் கொத்தமல்லி இலைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் கடாயை இறக்கி விடுங்கள் பின் வதக்கிய பொருட்களை நன்கு குளிர்ந்ததும் ராகி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். அதன் பின்பு மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு ஒரு வாழை இலையில் நன்றாக எண்ணெய் தடவி விட்டு ஒரு உருண்டை ராகி மாவை உருட்டி அதை இலையில் வைத்து நன்கு மெல்லிதாக தட்டிக் கொள்ளுங்கள், பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ராகி மாவை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இவ்வாறு மீதம் உள்ள ராகி மாவையும் உருண்டை பிடித்து வாழை இலையில் தட்டி தோசை கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ராகி அடை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 100gram | Calories: 256kcal | Carbohydrates: 46g | Protein: 18g | Saturated Fat: 2.4g | Sodium: 24mg | Potassium: 467mg | Fiber: 28g | Sugar: 7.6g

English Overview: ragi adai is one of the most important masala in south india. ragi adai or ragi adai seivathu eppadi or ragi adai in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here