- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast
நம்ம முன்னோர்கள் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவு தான் இந்த களி. ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய இந்த களி இந்த காலத்து பசங்களுக்கு எல்லாம் அவ்வளவு ஈஸியா கிடைக்கிறது ஆனா நம்ம முன்னோர்கள் எல்லாம் ரொம்ப வருஷம் இப்படி உடல் ஆரோக்கியத்தோட வாழ்ந்தாங்க அப்படின்னு கேட்டா அதுக்காக அவங்களோட உணவு முறைகள் தான் காரணம். அவங்களோட உணவு முறைகள்ல ரொம்பவே பாரம்பரியமான ஒன்னு தான் இந்த களி. இந்த காலத்துல இருக்கவங்க என்னதான் இந்த களிய மறந்துட்டாலும் இன்னும் ஒரு சிலர் இந்த காலத்திலும் இதை அடிக்கடி வீட்டுல செஞ்சு சாப்பிட்டு தான் இருக்காங்க.
ஆனா பல பேருக்கு அவங்க வீட்ல இந்த உணவு கிடைக்கிறது கிடையாது. களில பல வகைகள் இருக்கு. உளுந்தங்களி கேழ்வரகு களி, வெந்தயக் களி, அப்படின்னு நிறைய களி இருக்கு ஆனா ஒவ்வொரு களியும் நம்ம சாப்பிடும்போது நம்மளுக்கு ஒவ்வொரு விதமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில இப்ப நம்ம செய்ய போறது கேழ்வரகு களிதான். இந்த கேழ்வரகு களி நம்ம உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. இப்ப இருக்குற குழந்தைகளுக்கு எல்லாம் உடம்பில சத்துக்களே இல்லாம போயிடுது அதனால நிறைய காசு ஹாஸ்பிடல்ல போய் செலவு பண்றாங்க. ஆனா ஹாஸ்பிடல் போகாம உணவு முறைகளிலேயே பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்தா எல்லாருக்குமே ஆரோக்கியமானது.
இந்த கேழ்வரகு கழிய குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவுமே இட்லி தோசை சப்பாத்தி மாவு செய்யாமல் இந்த மாதிரி நம்மளோட பாரம்பரிய உணவுகளையும் வீட்டில் சமைச்சு கொடுங்க. அதுதான் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. இந்த களி செய்வதற்கு என்னமோ ரெண்டு முக்கியமான பொருள் மட்டும் தான் தேவைப்படும். ஆனா அதை பக்குவமா எப்படி செய்வது அப்படின்னு தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
இந்த களி செய்வது ரொம்ப கஷ்டம் எல்லாம் ஒன்னும் கிடையாது. ரொம்ப வெயில் எளிமையா இந்த களிய ஆற வச்சும் சாப்பிடலாம்.சூடாவும் சாப்பிடலாம். இந்த கலிக்கு நம்ம கருப்பட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. அப்படி இல்லைனா மீன் குழம்பு கருவாட்டு குழம்பு காரக்குழம்பு இதெல்லாம் வைத்து சாப்பிட்டாலும் களி ரொம்பவே அருமையா இருக்கும். இந்த அருமையான ஆரோக்கியமான கேழ்வரகு கழிய எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் ஒரு கப் கேழ்வரகு மாதர்க்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான கனமான பாத்திரத்தில் நாலு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த உடன் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்த மிதமான தீயில் வைத்து விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கொஞ்சம் கொஞ்சமாக வெந்து கொண்டே வரும் ஆனால் நாம் சிறிது நேரம் கிளறாமல் விட்டாலும் மாவு கட்டி சேர்த்து விடும்.
அதனால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் பாத்திரத்தின் அடியிலும் மாவு தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரத்திற்குள் மாவு நன்றாக வெந்துவிடும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதும் இப்பொழுது பக்குவம் பார்ப்பதற்கு கையை கொஞ்சம் தண்ணீரால் நினைத்துக் கொண்டு மாவை தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது. கையில் ஒட்டவில்லை என்றால் களி தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
இப்பொழுது இந்த கலியை ஒரு தட்டில் போட்டு நடுவில் கொலை பறித்து நல்லெண்ணையும் கருப்பட்டியும் சேர்த்து கொடுத்தால் சிறிய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இல்லையென்றால் காரமாக சாப்பிட நினைப்பவர்கள் கார குழம்பு மீன் குழம்பு கருவாட்டு குழம்பு வைக்கும் சாப்பிடலாம்.






