ராஜ்மா மசாலா காரசாரமான ருசியில் இப்படி ஒரூ தரம் செஞ்சி பாருங்க! பூரி சப்பாத்தி புலாவ் கூட எல்லாம் வெச்சு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்ற

By Prem Kumar · 16/11/2024

சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த பீன்ஸிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து ஸ்பைசியான ராஜ்மா மசாலா காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

வட இந்தியாவிலும், நேபாளத்திலும் கறிகள் செய்வதற்குப் பிரபலம். இந்த உணவு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்தியாவின் வட பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு பிடித்த பட்டியலில் இது எளிதாக முதலிடம் வகிக்கிறது. இந்திய தாய்மார்கள் இந்த உணவை அதிகம் சமைக்க விரும்புகிறார்கள். ஏனெனில் இது ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளமான மூலமாகவும் உள்ளது. குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த மக்கள் தினசரி உணவில் இதை சேர்த்துக் கொள்கின்றனர். விருந்தினர்களுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாதபோது ராஜ்மா பெரும்பாலும் ஒரு சரியான தீர்வாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full