Advertisement
சைவம்

பஞ்சு போல ரேஷன் அரிசியில் இட்லி தோசை மாவு இனி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி பூ போல வரும்!

Advertisement

உலகத்தில் மிகச்சிறந்த உணவு இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி மிகச்சிறந்த உணவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இட்லியை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதற்கு காரணம் இட்லி உண்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தினமும் இட்லி சாப்பிடுவதால் இட்லி உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது இதில் இரும்புச் சத்து உள்ளது. ஆவியில் வேக வைப்பதால் இட்லி நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த உணவு ஆகையால் மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது .

இத்தனை அற்புதங்களை உள்ளடக்கிய இட்லி பஞ்சு பஞ்சாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.இல்லத்தரசிகளின் மிகப்பெரிய கவலை எப்படி இட்லி பஞ்சு போல்  செய்வது என்பது மட்டுமே காரணம் இட்லி, மல்லிகை பூ போல் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது தான் .

Advertisement

அப்படி இருக்க ரேஷன் கடை அரிசியில் எப்படி பஞ்சு போன்ற இட்லி செய்வது என்பதை நாம் பார்க்கப் போகிறோம் இட்லிக்கு என்று தனியாக அரிசி எல்லாம் இருக்கிறது. அதை வாங்கி அரைத்து இட்லி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரசியல் இருந்து எப்படி இட்லி மிருதுவாக பஞ்சு போன்ற செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.

இட்லியில் அரிசி உளுந்து சேர்த்து செய்வதால் இரும்பு சத்தும் மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. ரேஷன் அரிசியில் இட்லி செய்யும் போது அதில் வரும் ஒருவித வாசனை சாப்பிடுவதற்கு  பிடிக்காது.

ரேஷன் அரிசியில் தான் இட்லி செய்து இருக்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற இட்லி செய்வதற்கு என்ன செய்முறை என்பதை பார்க்கலாம் .

ரேஷன் அரிசியில் இட்லி | Ration Rice Soft Idly flour In Tamil

Print Recipe
ரேஷன் கடை அரிசியில் எப்படி பஞ்சு போன்ற இட்லி செய்வது என்பதை நாம் பார்க்கப் போகிறோம் இட்லிக்கு என்று தனியாக அரிசி எல்லாம் இருக்கிறது. அதை வாங்கி அரைத்து இட்லி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரசியல் இருந்து எப்படி இட்லி மிருதுவாக பஞ்சு போன்ற செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். இட்லியில் அரிசி உளுந்து சேர்த்து செய்வதால் இரும்பு சத்தும் மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. ரேஷன் அரிசியில் இட்லி செய்யும் போது அதில் வரும் ஒருவித வாசனை சாப்பிடுவதற்கு  பிடிக்காது. ரேஷன் அரிசியில் தான் இட்லி செய்து இருக்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற இட்லி செய்வதற்கு என்ன செய்முறை என்பதை பார்க்கலாம் .
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Ration Rice Soft Idly flour
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 3
Calories 162

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 3 கப் ரேஷன் அரிசி
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 14 கப் உளுந்து
  • 34 கப் அவல்
  • உப்பு தேவையான அளவு  

Instructions

  • முதலில் அரிசியை அளப்பதற்கு தங்களிடம் உள்ள படி அல்லது கப் அல்லது டம்ளர் எதை வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.  3  கப் ரேஷன் அரிசியை ஒரு  பாத்திரத்தில்போட்டு அரிசி முழ்கும் அளவிற்கு தண்ணீர்
    Advertisement
    சேர்த்து சிறிது கல் உப்பையும் சேர்த்து  நன்றாககழுவ வேண்டும். அரிசியில் உள்ள பழுப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கலந்து வெளியேறும். அந்த நீரை வடித்து விட்டு மீண்டும் இதே போன்று 8 முறை உப்பு சேர்த்து அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு அதே அரிசி அளந்த கப்பில் 2  கப்இட்லி அரிசி சேர்த்து மீண்டும் இரண்டு முறை சுத்தமாக கழுவி அதிகமாகதண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  •  
    அதே கப்பலில் 1 14கப் ஊளுந்தை எடுத்து  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் 34 கப் அவலை எடுத்து கழுவி விட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.அவல் சேர்ப்பதால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  • உளுந்து ஊறிய பிறகு கிரைண்டரில் உளுந்தை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மாவு 10நிமிடத்தில் உபரியாக வரும். ஆனால் குறைந்தது 25 நிமிடமாவது அரைத்து அள்ள வேண்டும். உளுந்து மாவு கெட்டியாகவும் இருக்க கூடாது தண்ணியாகவும் இருக்க கூடாது. பதமாக இருக்க வேண்டும்.
  • உளுந்தை அள்ளி ஒரு பாத்திரத்தில் போட்டு பின் அவலை கிரைண்டரில் போட்டு 5 நிமிடம் அரைக்கவும். அரிசியுடன் அவலை சேர்த்து அரைக்க கூடாது. அவல் அரைபட்டதும் அரிசியில் உள்ள நீரை கழுவி வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு  அரைக்கவும்.5 மணி நேரம் ஊறியதால் 15 நிமிடத்தில் சற்று கொரகொரப்பாக அதாவது ரவைரவையாக  அரைப்பட்டுஇருக்கும் அப்போதுபோது தேவையான அளவு உப்பு சேர்த்து  அரைத்து  வழித்துஉளுந்து மாவுடன் நன்றாக கலந்து மூடி வைக்கவும்.
  • 8 முதல் 9 மணி நேரம் கழித்து பார்த்தால் இட்லி மாவு  நன்றாகபுளித்து இருக்கும்.  மாவைநன்றாக கலக்கவும் அப்போது தான் அடியில் உள்ள மாவுடன் ஒன்றாக கலக்கும்.. இப்போது இட்லி ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுட சுட சூடானமிருதுவான பஞ்சு போன்ற இட்லி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 34g | Protein: 6g | Fat: 4g | Sodium: 53mg | Potassium: 213mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

33 நிமிடங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

23 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago