Advertisement
ஸ்வீட்ஸ்

தின்ன தின்ன திகட்டாத சுவையில் ரவா லட்டு ஒரு தடவை இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Advertisement

நாம் பலவகையான லட்டு சாப்பிட்டு இருப்போம். மோதி லட்டு, பூந்தி லட்டு, டிரை ஃப்ரூட்ஸ் லட்டு, சிறுதானிய லட்டு என பல லட்டுக்களை சாப்பிட்டு ருசித்து இருப்போம். குழந்தைகளுக்கும் லட்டு என்றாலே மிக மிக பிடிக்கும். எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக கடைகளில் வாங்குகின்ற லட்டுக்கள் மட்டுமே சுவையாக இருக்கும் என்று நான் நினைத்திருப்போம்.

ஆனால் இப்பொழுதெல்லாம் வீடுகளிலே கடைகளில் கிடைக்கின்ற லட்டுக்கள் போன்று நம்மால் செய்ய முடியும். சுவையும் கடைகளில் கிடைப்பது போன்று இருக்கும். நாம் அந்த வகையில் இன்று கடைகளில் கிடைக்கும் ரவா லட்டு போன்று வீட்டிலேயே செய்யப் போகிறோம். நம் வீட்டில் ஏதாவது விசேஷங்களோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலோ இந்த ரவா லட்டு வீட்டில் செய்தால் சட்டென்று காலியாகி விடும்.

Advertisement

அந்த அளவிற்கு மிகுந்த ருசி கொண்டது தான் இந்த ரவா லட்டு. மிகவும் எளிமையாக ஒரு அரை மணி நேரத்திலேயே இந்த லட்டுவை செய்துவிடலாம். ரவையை நன்றாக வறுத்து மணக்க மணக்க நெய்விட்டு செய்கின்றாய் இந்த ரவா லட்டு வாசனை வீடு எங்கும் மணக்கும். அப்படி வீடே மணக்கின்ற மிகவும் ஒரு அருமையான லட்டுவை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.

ரவா லட்டு | Rava Laddu Recipe In Tamil

Print Recipe
கடைகளில் கிடைக்கும் ரவா லட்டு போன்று வீட்டிலேயே செய்யப் போகிறோம். நம் வீட்டில் ஏதாவது விசேஷங்களோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலோ இந்த
Advertisement
ரவா லட்டு வீட்டில் செய்தால் சட்டென்று காலியாகி விடும். அந்த அளவிற்கு மிகுந்த ருசி கொண்டது தான் இந்த ரவா லட்டு. மிகவும் எளிமையாக ஒரு அரை மணி நேரத்திலேயே இந்த லட்டுவை செய்துவிடலாம். ரவையை நன்றாக வறுத்து மணக்க மணக்க நெய்விட்டு செய்கின்றாய் இந்த ரவா லட்டு வாசனை வீடு எங்கும் மணக்கும். அப்படி வீடே மணக்கின்ற மிகவும்
Advertisement
ஒரு அருமையான லட்டுவை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.
Course deserts
Cuisine tamil nadu
Keyword Rava Laddu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 247

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ரவை
  • 1/4 கப் நெய்
  • 2 கப் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 கப் பால்
  • 10 முந்திரி
  • 10 திராட்சை

Instructions

  • முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி ரவையை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த சூடான ரவையை போட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • எடுத்து வைத்துள்ள பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவேண்டும். காய்ச்சிய பாலை ரவை கலவையில் ஊற்றி கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுதுவறுத்த ரவையில் செய்த சூப்பரான ரவா லட்டு தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 32g | Sodium: 32mg | Potassium: 366mg | Fiber: 10.1g | Calcium: 6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

34 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

4 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

17 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago