வாழைக்காய் பொடி மாஸ் இப்படி செய்து கொடுத்தால் வாழைக்காய் வேண்டாம் என்று சொல்பவர்களும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

நாம முட்டையில பொடிமாஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது வாழைக்காய் பொடி மாஸ். உருளைகிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது எல்லாரும்  ஆனால் இப்போ  வாழைக்காய் வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். வாழை அப்படினாலே அடி முதல் நுனி வரை பயன்பட கூடியது. வாழையின் அனைத்து பாகங்களும் உணவிற்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

-விளம்பரம்-

உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப அனைத்து சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆகையால் குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச வாழைக்காய் பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க.

- Advertisement -

அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு  இப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும். அந்த வகையில வாழைக்காய் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொடிமாஸ் செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த வாழைக்காய் வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம். வாங்க எப்படி சுவையான வாழைக்காய் பொடிமாஸ் செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

வாழைக்காய் பொடி மாஸ் | Raw Banana Podimas In Tamil

உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும்.அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப அனைத்து சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆகையால் குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேக வச்ச வாழைக்காய் பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த வாழைக்காய் வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Raw Banana Podimas
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 வாழைக்காய்
  • 3 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 4 காய்ந்தமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைக்காய் தோலை நீக்கிவிட்டு கழுவி  சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய வாழைக்காயை உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து தனியாக வைத்து விடவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை  மட்டும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • வாழைக்காய் வதங்கி கொண்டிருக்கும் பொழுதே வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தெடுத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாழைக்காயில்  பொடித்து வைத்துள்ள மிளகாய் , சீரக, தனியா பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
     
  • பொடியை சேர்த்து நன்றாக வாழைக்காயுடன் கலந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு இறக்கினால் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg