காலை டிபனுக்கு ருசியான வாழைக்காய் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிட பக்காவா இருக்கும்!

- Advertisement -

வாழைக்காய் வைத்து இதுவரை வாழைக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் போன்றவற்றை மட்டுமே சமைத்து இருப்போம். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆனால் வாழைக்காயை பயன்படுத்தி ஒரு சுவையான சைடிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். மொறுமொறுவென இந்த வாழைக்காய்களை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து சுட சுட பரிமாறுங்கள்.

-விளம்பரம்-

அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -

கொஞ்சம் மொறுமொறுவென கொஞ்சம் காரசாரமான வடையை டீ குடிக்கும் போது ஒரு கடி கடித்துக் கொண்டால் தனி சுகம் தான். வாழைக்காயை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வடையை சுட்டு அசத்தலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.

Print
5 from 2 votes

வாழைக்காய் வடை | Raw Banana Vada Recipe In Tamil

கொஞ்சம் மொறுமொறுவென கொஞ்சம் காரசாரமான வடையை டீ குடிக்கும் போது ஒரு கடி கடித்துக் கொண்டால் தனி சுகம் தான். வாழைக்காயை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வடையை சுட்டு அசத்தலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Raw Banana Vada
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 வாழைக்காய்
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 ஸ்பூன் ரவை
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி துருவல்
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தழை

செய்முறை

  • முதலில் வாழைக்காயை ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாழைக்காய் வெந்து குக்கரில் விசில் அடங்கியதும், வெந்த வாழைக்காய்களை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து தோலை உரித்தால் சுலபமாக பிரிந்து வந்துவிடும். இந்த வாழைக்காய்களை ஒரு துருவலில் துருவி எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் கையாலேயும் மசித்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
  • இப்போது அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், அரிசி மாவு – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, சேர்த்து உங்கள் கையைக் கொண்டு இந்த மாவை நன்றாக கலந்து கொடுங்கள்.
  • இந்த கலவை கொஞ்சம் ட்ரையாக இருக்கும். லேசாக 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரைத் தெளித்து இந்த மாவை வடை விடும் பக்குவத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • தயாரான மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கைகளில் வைத்து வடை போல தட்டி அப்படியே நிறைய எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால், சுவையான வாழைக்காய் வடை தயார்!!

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 22.84g | Protein: 1.09g | Fat: 0.33g | Fiber: 3.1g | Iron: 3.1mg

இதையும் படியுங்கள் :