Advertisement
அழகு

உங்களுக்கு பொடுகு தொல்லை தீர வேண்டுமா ?

Advertisement

நம் தலையில் ஏற்படும் பிரச்சினைகளில் மிக முக்கிய பிரச்சினை முடி பிரச்சனைதான். சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவருமே தங்களது முடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க வேண்டும் என தான் அனைவரும் நினைப்போம். ஆனால் அதையும் தாண்டி முடி கொட்டுதல், தலைமுடி நரைத்து போதல், சொட்டை விழுதல் மற்றும் முடிகளில் பொடுகு வைத்தல் போன்ற பிரச்சனைகள் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் தலையே சரியாக பராமரிக்கல் விட்டு விட்டால் இந்த பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கும். இன்று இந்த பொடுகு பிரச்சனையை கையில் எடுத்து அதை சரி பண்ணுவதற்கான என்ன செய்வது, எந்த பொருட்கள் உபயோகப்படுத்துவது என அனைத்தையும் இந்த அழகு குறிப்பில் நாம் காணலாம்.

வேப்பிலை :-

Advertisement

பழங்காலத்தில் இருந்தே பொடுகு தொல்லையை நீக்குவதற்காக இயற்கை வழியில் மற்றும் எளிமையான முறையிலும் பயன்படுத்தியது தான் வேப்பிலை. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வேப்பிலை பவுடரை எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் பின் அந்த நீரை நன்றாக வடிகட்டி ஆற வைத்து தலை குளிக்கும் போது பொடுகு தொல்லை தீரும். அது மட்டும் இல்லாமல் வேப்பிலையை அரைத்து தலையில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலைய அலசி கொள்ளவும். இப்படி செய்வதன் மூலமாகவும் பொடுகு தொல்லை தீரும்.

வெள்ளரிகாய் :-

தலையில் உள்ள பொடுகை நீக்குவதில் வெள்ளரிக்காவும் ஒன்று. வெள்ளரிக்காயின் மேற்புறத்தோலை சீவி விட்டு துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்துக் கொண்ட வெள்ளரிக்காயை ஒரு கை எடுத்து அதை பிழிந்து அந்த சாற்றை ஒரு பவுளில் சேகரித்துக் கொள்ளுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் அரைத்த வெள்ளரிக்காயை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு

Advertisement
டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்பு இந்தச் சாறை தலையில் நல்ல பரப்பி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். பின்பு அரை மணி நேரம் ஊற வைத்து முடியை அலசி கொள்ளுங்கள்.

தயிர் :-

நம் தலையில் இருக்கும் அதிகப்படியான பொடுகு தொல்லையே நீக்குவதற்கு தயிர் ஒரு இயற்கையான மற்றும்

Advertisement
எளிமையான மருந்து என்று சொல்லலாம். இந்த பொடுகு தொல்லை உள்ள நபர்கள் ஒரு கப் தயிரை நன்றாக தலையில் தேய்த்து முடி முழுவதும் தயிர் இருக்கும்படி தேய்த்து கொள்ளவும். ஒரு மணி நேரம் முடியில் தயியை ஊற வைக்கவும். அதன் பின்பு வீட்டில் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சோப்பை பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளவும் அது மட்டுமில்லாமல் தயிர் உடல் சூட்டை குறைத்து முடிக்கு பளபளப்பு தன்மையும் கொடுக்க வல்லது.

பாசிபயறு :-

பாசி பயறும் தலையில் உள்ள பொடுகு தொல்லையே நீக்குவதற்கு இயற்கையான மற்றும் எளிமையாக ஒரு மருந்தாகும். ஒரு பவுலில் தேவையான அளவு பாசிப்பயிர் எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவு ஆக்கிக் கொள்ளுங்கள். பின்பு அரை கப் பாசிப்பயறு மாவை பவுளில் எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவில் தயிர் சேர்த்து கலக்கி கொள்ளவும். பின் இந்த கலவையை தலையில் தேய்த்து முடிவில் அனைத்து இடத்தில் பரப்பி விட்டு ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலையை தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

24 நிமிடங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

2 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

6 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

7 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

8 மணி நேரங்கள் ago