Advertisement
ஐஸ்

அடிக்கிற வெயிலுக்கு இதமா ராயல் ஃபலூடா இப்படி செய்து பாருங்க! குளு குளுனு இருக்கும்!!!

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்தமான உணவு வகைகளைத் தயார் செய்ய பெரும்பாலானோர் மறப்பதில்லை. இருப்பினும், இந்த கோடை காலத்தில், குளிர்ந்த ராயல் ஃபலூடா ரெசிபி செய்வதன் மூலம் என்றென்றும் மறக்கமுடியாததாக ருசியான, குளிர்ச்சியான உணவு நமக்கு கிடைக்கும். ராயல் ஃபலூடா தயாரிப்பதற்கான செய்முறை மிகவும் எளிதானது. இதை முயற்சி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் சுவையான மற்றும் குளிர்ந்த ஐஸ்கிரீமை உண்டு மகிழ முடியும். எனவே  ராயல் ஃபலூடா செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

ராயல் ஃபலூடா | Royal Falooda Recipe In Tamil

Print Recipe
கோடை காலத்தில், குளிர்ந்த ராயல் ஃபலூடா ரெசிபி செய்வதன் மூலம் என்றென்றும் மறக்கமுடியாத ருசியான மாற்று குளிர்ச்சியான உணவு நமக்கு கிடைக்கும். ராயல் ஃபலூடா தயாரிப்பதற்கான செய்முறை மிகவும் எளிதானது.
Course Dessert
Cuisine Indian
Keyword Royal Falooda
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Calories 57

Equipment

  • 1 பவுள்

Ingredients

  • 10 கிராம கடற்பாசி                                  
  • சீனி                                           தேவையானஅளவு
  • சேமியா                                     தேவையானஅளவு
  • கலர் எஸன்ஸ்                           விருப்பப்பட்டவை
  • கஸ்டர்ட்                                    விருப்பப்பட்டFLAVOUR
  • பழங்கள்                                    விருப்பப்பட்டவை (ஆப்பிள், மாதுளை, திராட்சை, .etc )
  • சப்ஜா விதை 
  • 1 டீஸ்பூன் கேரமல் ஸிரப்                           (தேன்,கோகோ ஸிரப்)
  • 2 WAFER OR KIT KAT           
  • நட்ஸ்                                         விருப்பப்பட்டவை (பாதாம்,பிஸ்தா,சுக்குர், முந்திரி பருப்பு, பேரீச்சை பழம்)
    Advertisement

Instructions

  • கடற்பாசியை 3 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்த பிறகு,அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். தேவையான சீனி சேர்த்து கடற்பாசியை நன்றாக காய்ச்சவும்.
  • கடற்பாசியை விருப்பத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று அகலமான தட்டில் ஊற்றி விருப்பப்பட்ட கலர் எஸன்ஸ்களை ஒவ்வொன்றிலும் கலந்து கட்டியானதும் சின்னத் துண்டுகளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • சேமியாவை சீனி சேர்த்து தண்ணீரில் வேக விட்டு வடித்து கொள்ளவும். சேமியா குழைய வேகக் கூடாது. அவித்தசேமியாவை விருப்பப்பட்ட கலர் எஸன்ஸ்களை ஊற்றி கலந்து தனித்தனியாக வைக்கவும்.கஸ்டர்ட தயார் செய்து வைக்கவும்.விருப்பப்பட்ட பழங்களை சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • சப்ஜா விதையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.நட்ஸ்( NUTS) வகைகளை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் தனித்தனியாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஃபலூடா கிளாஸை எடுத்து அதில் முதலில் சப்ஜா விதையை ஊற்றவும். அதன்மேல் ஒரு கலர் கடற்பாசியை கொஞ்சமாக வைக்கவும்.
  • பிறகு பழங்கள் அடுத்து கஸ்டர்ட் சேமியா பிறகு வேறொரு கலர் கடற்பாசி, பழங்கள், கஸ்டர்ட் என உங்கள் விருப்பத்திற்கேற்பஒவ்வொரு அடுக்காக அழகாக வைக்கவும்.
  • கடைசியில் ஐஸ்கிரீம் ஒரு க்யூப் வைத்து அதன்மேல் விருப்பத்திற்கேற்ப நட்ஸ் தூவவும். கேரமல் சிரப் கோகோ (அ) தேன் ஊற்றவும்.வேஃபர் (WAFER) (அ) கிட்கேட்( KIT KAT) வைத்து பரிமாறஅட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Serving: 40g | Calories: 57kcal | Carbohydrates: 0.15g | Protein: 1g | Fat: 1g | Sugar: 27g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

2 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

12 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

12 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

13 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

16 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

16 மணி நேரங்கள் ago