Advertisement
ஸ்நாக்ஸ்

மொறு மொறுனு ஸ்நாக்ஸாக ஜவ்வரிசி வடை இப்படி செய்து பாருங்க ஒரு வடை கூட மிச்சமாகாது!

Advertisement

மாலை நேரமானாலும் சரி குளிர்காலம் ஆனாலும் சரி ஈவினிங் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது கரம்புற என்று இருக்கும் வீட்டில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான ஜவ்வரிசி வடையை  கிறிஸ்ப்பியா ஹோட்டல் ஸ்டைல்ல எப்படி செய்யறது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம் வாங்க.  

இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும் பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில்  சமையல் இந்த குறிப்பு பகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான ஜவ்வரிசி வடை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.ஸ்னாக்ஸ் செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

Advertisement

ஜவ்வரிசி வடை | Sabudana Vada Recipe In Tamil

Print Recipe
இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும்பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில்  சமையல் இந்த குறிப்புபகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான ஜவ்வரிசி வடை தான் தெரிந்து
Advertisement
கொள்ளப் போகிறோம்.ஸ்னாக்ஸ்செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால்இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course snacks
Cuisine mumbai, tamilnadu
Keyword Sanudana Vada
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 5 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் ஜவ்வரிசி
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 தேக்கரண்டி உப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5-6 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கைவேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை தண்ணீரில்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியில் தண்ணீர் அதிகம் இருந்தால் வடையில் எண்ணெய் அதிகமாக இருக்கும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஜவ்வரிசியுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக சேரும்படி நன்கு பிசைந்துக் கொள்ளவும்
  • ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் பொரிந்து வெந்ததும் எடுத்து விடவும்.
  • சுவையான கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

4 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

4 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

4 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

6 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

7 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

7 மணி நேரங்கள் ago