Advertisement
சைவம்

ஒரு முறை இப்படி மட்டும் ஜவ்வரிசி தோசை செய்து பாருங்க! இனி அடிக்கடி உங்க வீட்டில் இந்த தோசை தான்!

Advertisement

பெரும்பாலும் இப்போதெல்லாம் நம்முடைய வீடுகளில் காலை இரவு என்றால் இட்லி தோசை மாவு இல்லாமல் டிபன் வேலை நடப்பதே கிடையாது. இரண்டு இட்லி, இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள ஏதோ ஒரு சட்டினி. இப்படித்தான் சமையல் வேலை ஆகிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஜவ்வரிசியை வைத்து தோசை செய்தல் மிகவும் ருசியாக இருக்கும்.

குழந்தைகள் விருப்பமாக இதை சாப்பிடுவார்கள். அவ்வளவு மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும். ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். இதில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்வதால், ஒரு காயும் சேர்த்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

Advertisement

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையே அதிகமாக செய்வது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் இட்லி, தோசையை சற்று வேறுவித சுவைகளிலும் செய்ய முடியும். அவ்வாறு ஒரு சில வீடுகளில் ஊத்தாப்பம், வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமாக செய்து கொடுப்பார்கள். இப்படி வித்தியாசமான தோசையில் ஒரு வகைதான் இந்த ஜவ்வரிசி தோசை. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகள் இந்த உணவை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஜவ்வரிசி ஊத்தாப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஜவ்வரிசி தோசை | Sago Dosa Recipe In Tamil

Advertisement
Print Recipe
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாகசாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையே அதிகமாக செய்வது அனைவருக்கும் இருக்கின்ற ஒருவழக்கமாக மாறி விட்டது. ஆனால் இட்லி, தோசையை சற்று வேறுவித சுவைகளிலும் செய்ய முடியும்.அவ்வாறு ஒரு சில வீடுகளில்
Advertisement
ஊத்தாப்பம், வெங்காய தோசை, ரவா தோசை என விதவிதமாக செய்துகொடுப்பார்கள். இப்படி வித்தியாசமான தோசையில் ஒரு வகைதான் இந்த ஜவ்வரிசி தோசை. இதன்சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகள் இந்த உணவை விருப்பமாகசாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ஜவ்வரிசி ஊத்தாப்பத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Sago Dosa
Prep Time 15 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 332

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ஜவ்வரிசி
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 2 உருளைக்கிழங்கு
  • இஞ்சி சிறிது
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு  தேவையானஅளவு

Instructions

  • தோசை செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும், பச்சைபட்டாணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு,ஊற வைத்த ஜவ்வரிசியுடன் அரைத்த பட்டாணி, மசித்த உருளைக் கிழங்கு, துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசை ஊற்றுங்கள்.
  • சூடாகச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்

Nutrition

Serving: 500g | Calories: 332kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

55 நிமிடங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

5 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

7 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

7 மணி நேரங்கள் ago