Advertisement
அசைவம்

வீடே கமகமக்கும் சால மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

பெரும்பாலும் பலரது வீடுகளில் மீன் குழம்பு வைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றுதான் ஏனென்றால் அனைத்து குழம்புகளிலும் சரியாக செய்து தெரிந்த உங்களுக்கு மீன் குழம்பு வைப்பது சில பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் குறை கூறுவார்கள் என்பதால் மீன் குழம்பு செய்வதையே குறைத்து விடுவீர்கள். இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் இந்த பதிவில் வரும்படியாக நீங்கள் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் மறுமுறையும் மீன் குழம்பு செய்து தாருங்கள் என்று உங்களிடம் அடம் பிடிப்பார்கள்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

அப்படி சுவையான மீன் குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் அதுவும் சால மீன் அல்லது மத்தி மீன் என்பார்கள் இந்த மீனே ஒரு மனிதனுக்கு உடலுக்கு தேவைப்படும் விட்டமின் பி 12லில் 13 % மனிதனுக்கு கிடைக்கிறது. மேலும் இது நமது நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது மேலும் ஒமேகா 3 அமிலம் சால மீனில் இருப்பதால் இதே நோய் ஏற்படுவதை இது குறைக்கும் இன்று இந்த சால மீனை பயன்படுத்தி எப்படி ருசியான மீன் குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

மீன் குழம்பு | meen kulambu seivathu eppadi

Print Recipe
சால மீன் அல்லது மத்தி மீன் என்பார்கள் இந்த மீனில் ஒரு மனிதனுக்கு உடலுக்கு தேவைப்படும் விட்டமின் பி 12லில் 13 % மனிதனுக்கு கிடைக்கிறது. மேலும் இது நமது நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது மேலும் ஒமேகா 3 அமிலம் சால மீனில் இருப்பதால் இதே நோய் ஏற்படுவதை இது குறைக்கும் இன்று இந்த சால மீனை பயன்படுத்தி எப்படி ருசியான மீன் குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
Course Main Course
Cuisine Indian, TAMIL
Keyword SALA MEEN KULAMBU, சால மீன் குழம்பு
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 25 minutes
Total Time 40 minutes
Servings 4 PERSON
Calories 100

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • ½ KG சால மீன் ( மத்தி மீன் )
  • ½ கப் தேங்காய் அரைத்தது
  • ½ கப் புளி கரைசல்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 4 சின்ன வெங்காயம் பொடியா நறுக்கி கொள்ளவும்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 TBSP இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 TBSP கடுகு                            
  • 3 TBSP மிளகாய் தூள்
  • 3 TBSP சீரகத் தூள்
  • ½ TBSP மஞ்சள் தூள்
  • 1 TBSP மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிது
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • உங்கள் வீட்டில் மீன் குழம்பு செய்வதற்கு மண்பானை சட்டி இருந்தால் கண்டிப்பான முறையில் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேறு கடாய் அல்லது குழம்பு பாத்திரங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • முதலில் நீங்கள் வாங்கி வந்த சால மீனை இரண்டு முறை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெய் சூடு ஏறியதும் அதில் கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பின்பு இதனுடன் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பின்பு இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும், தக்காளி பச்சை வாடை போயி மென்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் புளி கரைசலை கடாயில் ஊற்றி விடுங்கள் பின்பு கடாயில் இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். நம் போட்ட மசால் பொருட்களின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள், தண்ணீர் பற்றவில்லை என்றால் சிறிது சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு குழம்பு நன்றாக கொதித்தவுடன் நம் அலசி வைத்திருக்கும் சால மீனை குழம்பில் சேர்க்கவும், பின் மீன் வெந்து வர நன்றாக கொதித்த உடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்ககவும்.
  • பின் குழம்பை இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும் பின்பு கடாயை இறக்கி கொத்தமல்லி தூவி விடுங்கள் இப்பொழுது சுவையான சால மீன் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4PERSON | Calories: 100kcal | Protein: 12g | Fat: 5g
Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

2 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

3 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

5 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

10 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

10 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

10 மணி நேரங்கள் ago