சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக உள்ளது. கல்யாண வீட்டு சாம்பார். விருந்து சாம்பார் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. சாம்பார் என்றாலே நம்மில் பலருக்கு ரொம்பவே இஷ்டம். அதுலயும் கல்யாணம் விட்டு சாம்பார் என்றால் சொல்லவே வேண்டாம்.
ஒரு முறைக்கு இரண்டு முறை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். ஆனால் நம்முடைய வீட்டில் காய்கறிகள் போட்டு சாம்பார் வைத்தால் மட்டும் வீட்டில் இருப்பவர்கள் யாருமே சாப்பிட மாட்டார்கள். கேட்டால் கல்யாண வீட்ல வைக்கிற சாம்பார் தான் சுவையாக இருக்குது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த விருந்து சாம்பாரை நம்முடைய வீட்டிலும் மணக்க மணக்க செய்யலாம். இந்த பதிவில், வீட்டிலேயே மணக்க மணக்க கல்யாணி வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
கல்யாண வீட்டு சாம்பார் | Kalyana Sambar Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 3/4 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கேரட்
- 10 பீன்ஸ்
- 10 அவரைக்காய்
- 1/4 கப் மஞ்சள் பூசணிக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- புளி எலுமிச்சை அளவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 3 குண்டு வரமிளகாய்
- 20 சின்ன வெங்காயம்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 10 பூண்டு
- 1 முருங்கைக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் வெல்லம்
அரைக்க:
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் அரிசி
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 2 டீஸ்பூன் தனியா
- 6 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 கட்டி பெருங்காயம்
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி விட்டு குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் சாம்பார் பொடி, நாம் அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்கவும்.
- பின் வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் உப்பு, புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
- சாம்பார் நன்கு கொதித்ததும் வெல்லம், நெய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு சாம்பார் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா வத்தல் சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள்!!!