கத்திரிக்காய் கொஸ்து ஒரு முறை இந்த மாதிரி ஈஸியா செஞ்சு பாருங்க!!

- Advertisement -

வீட்ல இட்லி தோசை பொங்கல் இதெல்லாம் செஞ்சா அதுக்கு சைடுஷா தக்காளி சட்னி தேங்காய் சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, சாம்பார், குருமா இது தான் வச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இனிமேல் இட்லி தோசை பொங்கல் எல்லாத்துக்கும் இந்த மாதிரி ஒரு தடவை கத்திரிக்காய் கொஸ்து செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்வதற்கு மூணு கத்திரிக்காய் இருந்தா போதும் ஈசியா செஞ்சு முடிச்சிடலாம். 15 நிமிஷத்திலேயே இந்த கத்திரிக்காய் கொஸ்து ரெடியாகிவிடும்.

-விளம்பரம்-

குக்கர்ல வச்சு நாலு விசில் விட்டு தாளிச்சு கொட்டினால் போதும் ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிவிடும். நார்மலா நம்ம பருப்பு சாம்பார் வைக்கிற மாதிரி இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்ய போறோம். பாசிப்பருப்பு சேர்த்து செய்றதால சுவை கூடுதலாக இருக்கும் நீங்க சட்னி செய்வதற்கு ஆகிற நேரத்தை விட இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்வதற்கு குறைவான நேரம் தான் தேவைப்படும். சீரகம் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் எல்லாமே சேர்த்து தாளிச்சு கொட்டினால் வீட்டில் ஒரே வாசனையா இருக்கும்.

- Advertisement -

சுடச்சுட வெண்பொங்கல் வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இதை சாப்பிட்டு பாருங்க வேற எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது. சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. சாதத்துக்கும் கூட இந்த கத்திரிக்காய் கொஸ்து சூப்பரா இருக்கும். சுட சுட கார குழம்பு பூண்டு குழம்பு வத்தல் குழம்பு இதெல்லாம் வெச்சா அதுக்கு சைடு டிஷ்ஷாவும் இந்த கத்திரிக்காய் கொஸ்து வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான கத்திரிக்காய் கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கத்திரிக்காய் கொஸ்து | Brinjal Gothsu Recipe In Tamil

வீட்ல இட்லி தோசை பொங்கல் இதெல்லாம் செஞ்சா அதுக்கு சைடுஷா தக்காளி சட்னி தேங்காய் சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, சாம்பார், குருமா இது தான் வச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இனிமேல் இட்லி தோசை பொங்கல் எல்லாத்துக்கும் இந்த மாதிரி ஒரு தடவை கத்திரிக்காய் கொஸ்து செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்வதற்கு மூணு கத்திரிக்காய் இருந்தா போதும் ஈசியா செஞ்சு முடிச்சிடலாம். 15 நிமிஷத்திலேயே இந்த கத்திரிக்காய் கொஸ்து ரெடியாகிவிடும். குக்கர்ல வச்சு நாலு விசில் விட்டு தாளிச்சு கொட்டினால் போதும் ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிவிடும். நார்மலா நம்ம பருப்பு சாம்பார் வைக்கிற மாதிரி இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்ய போறோம். பாசிப்பருப்பு சேர்த்து செய்றதால சுவை கூடுதலாக இருக்கும் நீங்க சட்னி செய்வதற்கு ஆகிற நேரத்தை விட இந்த கத்திரிக்காய் கொஸ்து செய்வதற்கு குறைவான நேரம் தான் தேவைப்படும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Keyword: Brinjal Gothsu
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 3 கத்தரிக்காய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 10 சின்ன வெங்காயம்

செய்முறை

  • ஒரு குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய் பாசி பருப்பு பெரிய வெங்காயம் நறுக்கிய தக்காளி நறுக்கிய பச்சை மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுக்கவும்.
  • நன்றாக வெந்ததும் மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் குக்கரில் சேர்த்து விட்டால் சுவையான கத்திரிக்காய் கொஸ்து தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 105kcal | Protein: 24g | Fat: 4.8g | Sodium: 118mg | Potassium: 170mg | Vitamin A: 74IU | Vitamin C: 90mg | Calcium: 22mg | Iron: 18mg

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்