- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உருளைக்கிழங்கு பொரியல் அப்படின்னா சின்ன குழந்தைகள் இருந்து பெரியவன் வரைக்கும் எல்லாருமே குஷி ஆயிடுவாங்க. என்ன சாப்பாடு செஞ்சாலும் அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மட்டும் நம்ம வச்சுட்டோம்னா போதும் சாப்பாடு காலியாகிவிடும் உருளைக்கிழங்கு பொரியல் பத்தவே பத்தாது அந்த அளவுக்கு நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு பொரியல் அப்படின்னாலே ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கு பொரியல் நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம உருளைக்கிழங்கு பொரியல் இல்லாமல், பொரியலுக்கு உருளைக்கிழங்கு நறுக்கி டைம் வேஸ்ட் பண்ணாம சட்டுனு ஒரு 15 நிமிஷத்துல செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மசியல் தான் பார்க்க போறோம்.
சுட சுட லெமன் சாதம் செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த உருளைக்கிழங்கு மசியல் மட்டும் செஞ்சு பாருங்க சூப்பரா காலியாகிவிடும். அந்த அளவுக்கு உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிட வாங்க. உங்க வீட்ல தட புடல சைவ விருந்து செய்றீங்க அப்படின்னா அப்பவும் கூட நீங்க டைம் மிச்சப்படுத்துவதற்கு இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மசியல் செய்யலாம். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இந்த உருளைக்கிழங்கு மசிகள் கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க.
சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இந்த உருளைக்கிழங்கு மசியல் இருக்கும். இதுக்கு நம்ம நிறைய மசாலாக்கள் கூட சேர்க்க போறது கிடையாது மிளகாய் தூள் மட்டும் சேர்த்தாலே போதுமானது தான். இந்த தனி மிளகாய் தூள் மட்டும் சேர்த்தாலே சுவை கூடுதலா இருக்கும் பெரிய வெங்காயம் கொஞ்சம் நிறைய சேர்த்துக்கிட்டீங்க அப்படின்னா டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.
உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கப்ப கூட நீங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா உங்களுக்கு செஞ்சு கொடுக்கலாம். சாப்பிட்டுட்டு கண்டிப்பா பாராட்டுவாங்க. இவ்ளோ ஈஸியான ஒரு ரெசிபியை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க அதே நேரத்துல உருளைக்கிழங்கு சாப்பிடறதால உங்களுக்கு வரக்கூடிய வாயு பிரச்சனைகளும் வராது. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்டான உருளைக்கிழங்கு மசியல் தான் இது. இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு மசியல் சட்டுனு 15 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு உப்பு தனி மிளகாய் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக எண்ணெயிலேயே வதக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு மசியல் தயார்.






