வெரைட்டி சாதங்கள் நிறைய இருக்கு. என்னதான் விதவிதமா குழம்பு செஞ்சாலும் ஒரு சிலருக்கு வெரைட்டி சாதம் தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில புளிசாதம் லெமன் சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் வெஜிடபிள் சாதம் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான தட்டைப்பயறு போட்டு செய்ற தட்டைப்பயறு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு இது ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். உடல் எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியம் காக்கவும், பலவகையான கீரைகள், காய்கறிகள், பயிறுகள் நமக்கு உதவுகின்றன.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவததில், இந்த தட்டைப்பயிறுக்கு பிரதான பங்கு உள்ளது. காரணம், இதில் நார்ச்சத்து மிக அதிகம். அசைவத்தில் உள்ளது போலவே, இந்த தட்டைப்பயிறும், நிறைய புரோட்டீன்கள் உள்ளன. அத்துடன், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும். இந்த தட்டைப் பயிறு சாதம் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக, இந்த சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, சீக்கிரமே செய்து முடித்து விடலாம். இந்தக் சாதம் நீங்கள் வீட்டில் செய்யும் போது வீடே மண மணக்கும். இந்த தட்டைப்பயறு சாதத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருமுறை செய்து கொடுங்கள், அவர்கள் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது தட்டைப்பயிறு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தட்டைப்பயறு சாதம் | Thatta Payaru Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 3 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 5 பல் பூண்டு
- 5 பச்சை மிளகாய்
- 3/4 கப் தட்டைப்பயறு
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 கப் அரிசி
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் தட்டைப்பயறு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் தட்டைப்பயறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரை திறந்து கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தட்டைப்பயறு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி