- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் ஒரு உப்புமா ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆம் இன்று சிவப்பு அரிசி அவல் உப்புமா தான் செய்து பார்க்க போகிறோம். இந்த சிவப்பு அவல் உப்புமாவை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உப்புமா பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இதை நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதனால் நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் மசாலா உப்புமா செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த அவல் உப்புமா இருக்கும். இதனுடன் நாம் சீனி சேர்த்து சாப்பிடும் பொழுது தித்திக்கும் சுவையுடன் அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த சிவப்பு அரிசி அவல் உப்புமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். வாரத்தில் ஒரு முறை காலை அல்லது இரவு உணவாக இதை செய்து பாருங்கள் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விடலாம்.
Ingredients
Method
முதலில் நாம் எடுத்துக் கொண்ட சிவப்பு அவலை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் அரை டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் அதனுடன் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, மூன்று பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் நான்கு முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
பின் இதனுடன் பொடியாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன். பின் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் கால் கப் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு இதனுடன் உப்புமாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு கடாயை 15 நிமிடம் முடிவு விடுங்கள்.
அதன் பின் காய்கறி நன்றாக வெந்து வந்ததும் இதனுடன் நம் ஊற வைத்த சிவப்பு அவலை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள் பின் ஒரு நிமிடம் கழித்து இதனுடன் சிறிது கொத்தமல்லி, இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு கடாயை மூடி குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சிவப்பு அவல் உப்புமா தயார்.






