Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான சின்ன வெங்காய வேர்க்கடலை சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

Advertisement

பொதுவாக நாம் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி வெங்காய சட்னி வேர்க்கடலை சட்னி, சாம்பார் பூண்டு சட்னி மிளகாய் சட்னி என செய்து சாப்பிட்டு இருப்போம். இந்த சட்னிகள் அனைத்தும் இட்லி தோசை சப்பாத்தி பொங்கல் என அனைத்திற்குமே ஒரு சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும். ஆனால் வேர்கடலையும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து ஒரு சட்னி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

நாம் தனியாக வேர்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம் வெங்காய சட்னியும் சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை இன்னும் அருமையாக இருக்கும். இந்த சட்னியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால் போதும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு சைடு டிஷ் ஆக மாறிவிடும். வேர்க்கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளது அதனால் வேர்க்கடலையை நாம் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

Advertisement

அந்த வேர்க்கடலையை ஒரு சிலர் அப்படியே சாப்பிட மாட்டார்கள் அதனால் நாம் அவர்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமாக சிம்பிளாக ஏதாவது சட்னி துவையல் என செய்து கொடுத்தால் அவர்கள் இட்லி தோசையுடன் சேர்த்து விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு வேர்க்கடலையை நாம் ஏதாவது ஒரு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இந்த வேர்க்கடலை பயன்படுத்தி சின்ன வெங்காயம் வேர்க்கடலை சட்னியை செய்து கொடுக்கலாம். இந்த சட்னியை நாம் செய்தால் ஒரு இட்லி சாப்பிடும் இடத்தில் இன்னொரு இட்லியை சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த சுவையான அட்டகாசமான சிம்பிளான சின்ன வெங்காயம் வேர்கடலை சட்னி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

சின்ன வெங்காய வேர்க்கடலை சட்னி | Small Onion Peanut Chutney In Tamil

Advertisement
Print Recipe
வேர்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம் வெங்காய சட்னியும் சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை இன்னும் அருமையாக இருக்கும். இந்த சட்னியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால் போதும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு சைடு டிஷ் ஆக மாறிவிடும். வேர்க்கடலையில்நிறைய சத்துக்கள் உள்ளது
Advertisement
அதனால் வேர்க்கடலையை நாம் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இந்த சுவையான அட்டகாசமான சிம்பிளான சின்ன வெங்காயம் வேர்கடலை சட்னி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Course chutney
Cuisine tamil nadu
Keyword Small Onion Peanut Chutney
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 95

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வேர்க்கடலை
  • 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • புளி சிறிதளவு

Instructions

  • முதலில் வேர்கடலையை ஒரு கடாயில் போட்டு வறுத்து அதனை ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்பு அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வேர்க்கடலையும் சின்ன வெங்காயமும் நன்றாக ஆரிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் அதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது அதனுடன் புளி காய்ந்த மிளகாய் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
  •  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை அனைத்தும் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • தாளித்த உடன் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சின்ன வெங்காயம் விழுதை அதில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான சின்ன வெங்காயம் வேர்க்கடலை சட்னி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 95kcal | Carbohydrates: 7g | Protein: 9g
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

1 மணி நேரம் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

2 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

4 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

6 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

7 மணி நேரங்கள் ago