- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் கிரேவியும் தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் இந்த மீல் மேக்கர் கிரேவி, சப்பாத்தி செய்வார்கள். எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம்.
அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல் மேக்கர் பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தான் நாம் பார்க்க இருக்கிறோம். சப்பாத்திக்கு கிரேவி அட்டகாசமான காம்பினேஷன். அதிலும் மீல் மேக்கர் கிரேவி மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அற்புதமாக இருக்கும். சைவ உணவாளர்களுக்கு இந்த மீல் மேக்கர் கிரேவி அசைவ உணவுக்கு நிகரான சுவையைக் கொடுக்கும். குறிப்பாக இந்த கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.சப்பாத்தி, நாண், தோசை, பூரி, பரோட்டா, ரொட்டி மற்றும் சாதத்திற்கு மிகச் சிறந்த காம்பினேஷனாக இந்த ரெசிபி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதனையும் படியுங்கள் : ருசியான மீல் மேக்கர் குருமா ஒரு முறை மட்டும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பின் அடிக்கடி நீங்களே விரும்பி செய்வீங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீல் மேக்கரை சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வறுத்து தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை நன்கு கழுவி விட்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின் பச்சை பட்டாணி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
பட்டாணி நன்கு வெந்தவுடன் வேக வைத்துள்ள மீல் மேக்கரை மசாலாவில் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடங்கள் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் பட்டாணி கிரேவி தயார். இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.






