- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? அப்படியானால் அந்த சோயாவைக் கொண்டு சோயா நெய் ரோஸ்ட் செய்யுங்கள். சோயா வைத்து சோயா பிரியாணி, சோயா கிரேவி, சோயா வறுவல், சோயா மிளகு கிரேவி அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த சோயா ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும்.
அந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான சோயா நெய் ரோஸ்ட் தான் பாக்க போறோம். இந்த சோயா நெய் ரோஸ்டை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த சோயா நெய் ரோஸ்ட் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான சோயா நெய் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் சோயா, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து, பின் தண்ணீர் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் வேகவைத்த சோயாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் நெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, வறுத்து வைத்துள்ள சோயாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இரண்டு நிமிடங்கள் கழித்து மசாலா சிறிது சுண்டி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா நெய் ரோஸ்ட் தயார்.






