ருசியான இனிப்பு தோசை இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் இருக்கிறோம். அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய இனிப்பு பருப்பு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் மசால் தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

இது போன்று ஒரு இனிப்பு பருப்பு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான இனிப்பு பருப்பு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

இனிப்பு பருப்பு தோசை | Sweet Parppu Dosai Recipe in Tamil

நாம் வீட்டில் தோசை சுடும் அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய இனிப்பு பருப்பு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று ஒரு இனிப்பு பருப்பு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Dosai, தோசை
Yield: 4 people
Calories: 83kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிபருப்பு
  • ¼ கப் பச்சரிசி
  • 2 tbsp துருவிய தேங்காய்
  • ¼ tsp ஏலக்காய் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நாம் எடுத்து கொண்ட பருப்பு மற்றும் அரிசியை தனித் தனியாக இரண்டு மூன்றும் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
  • பின்பு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி முதலில் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின் அரைத்த பருப்பை தனியாக எடுத்து கொண்டு பின் அரிசியை சேர்த்து நன்கு அரைத்து கொண்டு கெட்டியாக அரைத்து பின் முதலில் அரைத்த பருப்பையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
  • பின் அரைத்த மாவை ஒரு பவுளில் சேர்த்து பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு வெல்ல பாகு போல் கரைத்து கொண்டு பின் மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • பின் தோசை மாவுடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொண்டு. பின் வழக்கம் போல் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்.
  • பின் ஒரு கரண்டி மாவு ஊற்றி மாவை விரித்து விட்டு சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை இருபுறமும் வெந்தவுடன் பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான இனிப்பு பருப்பு தோசை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 83kcal | Carbohydrates: 46g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 3mg | Potassium: 382mg | Fiber: 3g | Sugar: 2g | Calcium: 1mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here