- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு கார்லிக் பன்னீர் ரோஸ்ட் செய்யுங்கள். பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த காரசாரமான பன்னீர் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும்.
அந்த ரெசிபிக்கு நீங்க அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான கார்லிக் பன்னீர் ரோஸ்ட் தான் பாக்க போறோம். இந்த கார்லிக் பன்னீர் ரோஸ்டை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த பன்னீர் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான கார்லிக் பன்னீர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய பன்னீரை அரைத்து வைத்துள்ள மசாலாவில் சேர்த்து அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி தூவி நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து அதில் பன்னீரை சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கார்லிக் பன்னீர் ரோஸ்ட் தயார்.






