- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் நெல்லிக்காய் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக நெல்லிக்காய் வைத்து ஒரு வித்தியாசமான தொக்கு செய்து பாருங்கள். வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற பல சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளன.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய். தினம் ஒன்று சாப்பிட்டாலே போதும், எந்த நோயும் நம்மை அண்டாது என்று நம்பப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ருசியான பெரிய நெல்லிக்காய் வைத்து சுவையான தொக்கு செய்யுங்கள். எப்போதும் சப்பாத்தி பூரிக்கு ஒரே மாதிரி தக்காளி தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செய்யுங்கள்.
சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த தொக்கு. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இந்த தொக்கை பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வாருங்கள் இப்போது சூப்பரான நெல்லிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
Ingredients
Method
முதலில் நெல்லிக்காயை நன்கு வேகவைத்து எடுத்து விதை நீக்கி நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அதனுடன் மசித்த நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மிளகு தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின் எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.






