Advertisement
சைவம்

மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?

Advertisement

என்ன தான் நம் வீட்டில் மிகவும் ருசிகரமான சாம்பார் செய்து கொடுத்தாலும் கல்யாண வீடுகளில் செய்யபடும் சாம்பாரை தான் நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி ஒரு பிடி பிடிப்பார்கள். மேலும் பள்ளி படிக்கும் போது நம் உடன் படிக்கும் அய்யர் வீட்டு பையன் கொண்டு வரும் சாம்பார் சோற்றை பார்த்தாலே நம்மில் பலர் அவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டை கேட்டு வாங்கி எல்லாம் சாப்பிட்டு இருப்போம். அவர்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளாக தான் இருக்கும் அதிலும் அவர்கள் வைக்கும் சாம்பார் இருக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் சால மீன் குழம்பு செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்.

Advertisement

இன்னும் அய்யர் வீடுகளில் சாம்பார் வைப்பது பாரம்பரிய கால முறையை கடைபிடித்துதான் வைப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு சாம்பாரில் சேர்க்கும் மாசலா பொடியில் எல்லாம் அவர்களை தயாரித்து கொள்வார்கள். கடைகளில் விற்கும் மசாலா பொடிகளை அவர்கள் என்றுமே பயன்படுத்துவதில்லை. அப்படி நாவிற்கு அவ்வளவு ருசியை தரும் அய்யர் வீட்டு சாம்பார் எப்படி செய்யவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

அய்யர் வீட்டு சாம்பார் | Iyyar Veetu Sambar Recipe in Tamil

Print Recipe
இன்னும் ஐயர் வீடுகளில் சாம்பார் வைப்பது பாரம்பரிய கால முறையை கடைபிடித்துதான் வைப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு சாம்பாரில் சேர்க்கும் மாசலா பொடியில் எல்லாம் அவர்களை தயாரித்து கொள்வார்கள். கடைகளில் விற்கும் மசாலா பொடிகளை அவர்கள் என்றுமே பயன்படுத்துவதில்லை. அப்படி நாவிற்கு அவ்வளவு ருசியை தரும் ஐயர் வீட்டு சாம்பார் எப்படி செய்யவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Main Course
Cuisine Indian, TAMIL
Keyword iyyar veedu sambar, அய்யர் வீட்டு சாம்பார்
Prep Time 15 minutes
Cook Time 30 minutes
Total Time 45 minutes
Servings 5 person

Ingredients

சாம்பார் மாசால செய்வதற்கு

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp மல்லி
  • ¼ tbsp வெந்தயம்
  • 1 சில் தேங்காய்

சாம்பாருக்கு

  • 1 tbsp எண்ணெய்
  • 4 piece முருங்கைகாய்
  • 4 piece மஞ்சள் பூசணி காய்
  • 4 piece கத்திர்க்காய்
  • ½ கப் புளி கரைத்த தண்ணீர்
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1 tbsp கடுகு                            
    Advertisement
  • ½ tbsp வெந்தயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 சிவப்பு மிளகாய்
  • கருவேப்பிலை சிறிது
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் ஐயர் வீட்டு சாம்பார் வைப்பதற்கு அவர்களின் தனித்தன்மையான மசலாவை தயார் செய்ய வேண்டும். முதலில் கடாய் அடைப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எணணெய் சூடேறும் வரும் காத்திருங்கள்.
  • என்னை சூடேறியவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மல்லி இந்த ஐந்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமா வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன்
    Advertisement
    பின் நம் வறுத்து எடுத்துள்ள பொருட்களை தனியா ஒரு பவுலில் எடுத்து சூடு ஆறும் வரை காத்திருங்கள். சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஓரு சில் தேங்காய் வெட்டி சேர்த்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து புளி கரைசலை ஊற்றி நம் சமையலுக்கு வைத்திருக்கும் காய்கறிகள் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து உப்பு கொள்ளுங்கள், பின உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இதை நன்றாக வேக வைக்கவும் காய்கறிகள் வெந்து வரும்போது, துவரம் பருப்பு சேர்த்து நன்றாக மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும் குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாம்பார் பொடி சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • அப்புறம் உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும், பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • எண்ணெய் சூடு ஏறியவுடன் அதில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை சிவப்பு மிளகாய் பச்ச மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  • பின் இந்த தாளிப்ப சாம்பாரில் சேர்த்துக் கொள்ளுங்கள் பின் சாம்பாரை இறக்கி சிறிது கொத்தமல்லியை தூவி விடுங்கள் அவ்வளவுதான் ஐயர் வீட்டு சாம்பார் இனிதே தயாராகி விட்டது.

Video

Notes

அப்டியே மறக்காம எங்க YouTube சேனலை subscribe பன்னிருங்க!

Nutrition

Serving: 5person | Carbohydrates: 26g | Protein: 7.1g | Fat: 0.7g | Sodium: 202mg

English Overview: Sambar is one of the most important dishes in south India. Sambar Recipe or Sambar Seivathu Eppadi or Sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the Tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

7 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

8 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

10 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

13 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

13 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

13 மணி நேரங்கள் ago