- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான எலுமிச்சை சாதம் செய்து சாப்பிட்டு
இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?
பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த எலுமிச்சை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம் வேக வைக்க ஏற்றார் போல் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் எண்ணைய் ஊற்றி சாதத்தை பாதி அளவு வேக வைத்து வடித்துக் கொள்ள வேண்டும்.சாதம் உதிரி யாக இருக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு நீள வாக்கில் கட் பண்ணிய பச்சைமிளகாய் சேர்க்க வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வேறு கடாயில் நிலக்கடலை வறுத்து சேர்க்க வேண்டும்.
தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர் சாதத்தை தாள்ளித்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.சாதத்தை நன்றாக கலந்து பின் பரிமாறவும். சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.






