- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி அப்படின்னு சொல்லலாம். வெறும் ரசம் சுடு கஞ்சி வச்சு அது கூட உருளைக்கிழங்கு ஃப்ரை செஞ்சாலே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு வச்சு நிறைய ரெசிபீஸ் செய்யலாம் உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு மசியல், பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் எப்பவுமே ஒரே மாதிரியா செஞ்சு போரடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை ஒரு தடவை செஞ்சு பாருங்க.
ரசம் சாதத்துக்கு சூப்பரா இருக்கும் புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் தயிர் சாதம் இது எல்லாத்துக்குமே ஒரு அருமையான காம்பினேஷனா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பெப்பர் ப்ரை செஞ்சு அதிலேயே சாதம் போட்டு கிளறி ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருவாங்க இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ருசியான சூப்பரான பொட்டேட்டோ பெப்பர் ப்ரை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க.
கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். உங்க வீட்டில் இருக்க கூடிய குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்ற தொந்தரவு இருந்தா கூட சுட சுட ரசம் வைத்து இந்த பொட்டேட்டோ ப்ரை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரே ஒரு தடவை மட்டும் இதை சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருமே இதை அடிக்கடி கேட்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பொட்டேட்டோ பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்
Ingredients
Method
உருளைக்கிழங்கை வேக வைத்து மீடியம் சைஸில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சீரகம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெட்டி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு ஒரு கடாயில் சோம்பு சீரகம் மிளகு சேர்த்து வறுத்து அரைத்து அந்த பொடியை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு உருளைக்கிழங்கில் பொடி இறங்கி வெந்த பிறகு இறக்கினால் சுவையான பொட்டேட்டோ பெப்பர் பிரை தயார்.






