- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி குழப்பமா இருக்குற சமயத்துல யோசிக்காம எப்பவும் ஒரே மாதிரியான சாதமாகவும் இல்லாம இந்த சூப்பரான சோயா ரைஸ் செஞ்சு கொடுங்க. இந்த சோயா ரைஸ் நீங்க எதிர் பார்க்காத அளவுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். சோயா இல்லனா மீல் மேக்கர் அப்படின்னு சொல்லக்கூடிய இதுல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கு. அதனால இத எல்லாருமே உணவுல சேர்த்துக்கிறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால இனிமேல் அடிக்கடி ப்ரோட்டின் உணவான இந்த மீல் மேக்கர உணவுல சேர்த்துக்கோங்க.
இதுல பொரியல் செஞ்சு கூட்டு செஞ்சு ஒரு சிலர் சாப்பிடுவாங்க. ஆனா அந்த மாதிரி சாப்பிட பிடிக்காதவங்க இந்த சோயா வச்சு ஒரு சூப்பரான ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க. குழம்பு காய்ன்னு வைக்கிறதுக்கு ஒரே போரா இருந்துச்சுன்னா இந்த சுவையான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்க. ஒன் பாட் ரைஸ் மாதிரி இதுவும் ஒன் பாட் சோயா ரைஸ் அப்படின்னு சொல்லலாம். இதை குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம் வேலைக்கு போறவங்களும் லஞ்ச் பாக்ஸுக்கு எடுத்துட்டு போகலாம். கண்டிப்பா மதியம் வரைக்கும் சாப்பிடுறதுக்கு அப்படியே இருக்கும். பெருசா எந்த வித்தியாசமும் இருக்காது.
குழந்தைகளும் சாப்டுட்டு மீதம் வைக்காம வீட்டுக்கு கொண்டு வருவாங்க. டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லார்கூடயும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இத ஒரு அரை மணி நேரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். அவ்ளோ ஈஸியான ரெசிபி இது. சாதத்தை ஒரு பக்கம் வேக வச்சிட்டு ஒரு பக்கம் மசாலாவுக்கு ரெடி பண்ணிட்டா அரைமணி நேரத்துல ஒரு சூப்பரான சோயா ரைஸ் ரெடியாகிவிடும். நீங்க காலையில லேட்டா எழுந்தா கூட இந்த ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். சிம்பிளா செஞ்ச மாதிரியும் இருக்கும் அதே நேரத்துல ஆரோக்கியமா செஞ்ச மாதிரியும் இருக்கும். சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான சோயா ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான சோயா பிரியாணி எப்படி செய்வது ?
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் உப்பு மிளகுத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஊற வைத்த சோயாவை சேர்த்து கலந்து 1/2 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
மசாலா உடன் சேர்ந்து சோயா நன்றாக வெந்தவுடன் வடித்த சாதம் கொத்தமல்லி இலைகள் தூவி கிளறி இறக்கினால் சுவையான சோயா ரைஸ் தயார்.






